பொது செய்தி

தமிழ்நாடு

வெற்றி மீது வெற்றி வந்து சேரட்டும்! எளிமையான இதய நிறைவு 'ரகசியம்' தெரியுமா?

Added : நவ 28, 2019
Advertisement
 வெற்றி மீது வெற்றி வந்து சேரட்டும்! எளிமையான இதய நிறைவு 'ரகசியம்' தெரியுமா?

திருப்பூர் : ''மனித வாழ்வின் ஆணி வேராக இருப்பது மகிழ்ச்சி. அதைப் பெறுவதன் மூலம், வெற்றிகளைக் குவிக்கலாம்'' என்று இதய நிறைவு நிறுவன தலைவர் ஸ்ரீகம்லேஷ் தேசாய் பட்டேல் கூறினார்.

ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும், இதய நிறைவு நிறுவனம் (ஹார்ட்புல்னெஸ் இன்ஸ்டிடியூட்), 165 நாடுகளில் செயல்படுகிறது.இந்நிறுவனத்தின் தலைவர், 'தாஜி' என அழைக்கப்படும், ஸ்ரீகம்லேஷ் தேசாய் பட்டேல் நேற்று திருப்பூர் வந்தார். கே.செட்டிபாளையத்தில் நடந்த தொழில்துறையினருடனான கலந்துரையாடலில், 'சமன்படுத்தப்பட்ட தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கை' என்ற தலைப்பில்,அவர் பேசியதாவது:இந்நிறுவனம் மூலம், இதய நிறைவு தியான பயிற்சி, மொத்தம், 165 நாடுகளில், 16 ஆயிரத்துக்கும் அதிகமான பயிற்சியாளர்கள் மூலம், இலவசமாக கற்றுத்தரப்படுகிறது. ஆண்கள், பெண்கள் யாரெனினும், மூன்று நாள் பயிற்சியில் பங்கேற்கலாம்; அதற்கு பிறகு, வீட்டில் தியானம் செய்யலாம்.

தொழிலுக்கு புதிய தொழில்நுட்பங்களை புகுத்துவது போல், தியானத்தை அனைவரும் கற்க வேண்டும். தியானம் மூலம் உடலும், மனமும் செம்மையாகிறது. தொடர் தியானத்தினால், ஒவ்வொருவரின் சிந்தனையும் மேம்படுகிறது. அதன் பயனாய், தொழில்துறையினர் சரியான திட்டமிடல் மூலம், வெற்றிகளை குவிக்கலாம்.மனிதவாழ்வின் ஆணி வேராக இருப்பது மகிழ்ச்சி; தியானத்தில் இது நிரந்தரமாக கிடைக்கிறது. துாக்கம் என்பது சோம்பேறித்தனம் அல்ல; குழந்தைகள், துாங்கும் போதுதான் வளர்கின்றன.

துாக்கம் என்பது வளர்ச்சியின் ஆதாரம். ஆழ்ந்த உறக்கம் உள்ளவர்கள், எடுத்த காரியத்தை வெற்றியாக முடிக்க முடியும்.தியானம் மூலம், மனதில் உள்ள கவலைகள், துயரங்கள் ஒழிந்து, ஆழ்ந்த துாக்கம் கிடைக்கும். 'பிராணாஹூதி' தியானத்தால், மனமும், உடலும் ஆரோக்கியமாக மாறிவிடுகிறது. திருப்பூர் தொழில்துறையினர் பல ஆண்டுகளாக பயிற்சியில் உள்ளனர். புதிய தொழில்முனைவோரும், இப்பயிற்சியில் இணைய வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார். முன்னதாக, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க நிர்வாகிகள் ராஜா சண்முகம், விஜயகுமார், பழனிசாமி, ராமசாமி உள்ளிட்டோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X