சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பின்னலாடை நிறுவன உரிமையாளர் 'கடத்தல்' புகார்

Added : நவ 28, 2019
Advertisement

திருப்பூர் : வீரபாண்டி, மூகாம்பிகை நகரை சேர்ந்தவர் குணசேகரன், 46; பின்னலாடை நிறுவன உரிமையாளர்.

சென்னையை சேர்ந்த சரக்கு ஏற்றுமதி நிறுவனம் மூலம், பின்னலாடைகளை, வெளிநாட்டுக்கு அனுப்பி வந்தார். இதற்காக, அந்நிறுவனத்துக்கு, பணம் அளிக்க வேண்டியிருந்ததாக கூறப்படுகிறது.இச்சூழலில், திருப்பூருக்கு குணசேகரனை தேடி வந்த, சென்னையை சேர்ந்த அந்நிறுவனத்தினர், வீடு அருகே அவரை மடக்கி, காரில் அழைத்து கொண்டு சென்ட்ரல் போலீஸ் ஸ்டேஷனுக்கு நேற்று சென்றனர்.இதை பார்த்த, குணசேகரனின் மனைவி, வீரபாண்டி போலீசில், 'கடத்தல்' புகார் அளித்தார்.

இதை தொடர்ந்து, மாநகராட்சி அலுவலகம் அருகே வைத்து காரை போலீசார் மடக்கினர். விசாரணையில், குணசேகரன் போலீஸ் ஸ்டேஷன் அழைத்து செல்லப்பட்டது தெரிய வந்தது. பின், இருதரப்பையும் வீரபாண்டி போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X