பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் 30ம் தேதி: தேர்வில் சாதிக்க துடிக்கும் சிட்டுக்கள் பங்கேற்கலாம்

Added : நவ 28, 2019
Advertisement
 சென்னையில் 30ம் தேதி: தேர்வில் சாதிக்க துடிக்கும் சிட்டுக்கள் பங்கேற்கலாம்


புதிய பாடத்திட்டத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள், பொதுத்தேர்வில் சாதிக்க வசதியாக, 'சக்சஸ் மந்த்ரா ஜெயித்துக் காட்டுவோம் 2.0' நிகழ்ச்சி, சென்னையில், 30ம் தேதி நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, சிறந்த கேள்விகள் கேட்கும் மாணவர்களுக்கு, சிறப்பு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.'தினமலர்' நாளிதழ், 'அமிர்தா விஸ்வ வித்யாபீடம்' நிறுவனத்துடன் இணைந்து, 'சக்சஸ் மந்த்ரா ஜெயித்துக் காட்டுவோம் 2.0' நிகழ்ச்சியை, நாளை மறுநாள், சென்னையில் நடத்துகிறது.புதிய பாடத்திட்டம்கலைவாணர் அரங்கில் காலை, 9:30 மணி முதல் மதியம், 1:00 மணி வரை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
நிகழ்ச்சியில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி உதயச்சந்திரன், முனைவர் சங்கர சரவணன், 'அமிர்தா விஷ்வ வித்யாபீடம்' நிறுவன பேராசிரியர்கள் பங்கேற்கின்றனர்.நிகழ்ச்சியில் பங்கேற்கும் கல்வியாளர்கள் மற்றும் புதிய பாடத்திட்ட தயாரிப்பு குழு வல்லுனர்கள், புதிய பாடத்திட்டத்தில், பொதுத்தேர்வு வினாக்கள் கேட்கப்படும் விதம், புதிய பாடத்திட்டத்தை அணுக வேண்டிய முறை குறித்து விளக்கம் அளிக்கின்றனர்.மாணவர்கள் நுழைவு தேர்வுகளுக்கு தயாராகும் விதம், மனப்பாடம் செய்யாமல் புரிந்து கற்கும் வழிமுறை, படிக்கும்போதே கிரியேட்டிவ் சிந்தனைகளை வளர்ப்பதன் அவசியம், சுயகற்றல் மற்றும் ஆழ்ந்த கற்றலை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து, நிகழ்ச்சியில் அறியலாம்.க்யூ.ஆர்., கோடு பயன்படுத்தும் வழிமுறை, சுவாரஸ்யம் குறையாமல் பாடங்களை படிக்கும் விதம், உடல்நலம் மற்றும் மனநலம் காப்பதன் அவசியம், உரிய நேரத்தில் பயமின்றி சுலபமாக தேர்வை எழுதும் விதம் ஆகியவை குறித்தும் நிபுணர்கள் விளக்கம்அளிக்கின்றனர்.
முன்னுரிமை
இந்நிகழ்ச்சிக்கு, முதலில் வரும், 1,000 மாணவர்களுக்கு, முக்கிய குறிப்புகள், வினாக்கள் அடங்கிய புத்தகம் மற்றும் வழிகாட்டி புத்தகம் இலவசமாக வழங்கப்படுகிறது. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், இருக்கை ஒதுக்கப்படும். இந்த பிரமாண்ட நிகழ்ச்சியில், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களும், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களும், பெற்றோரும் பங்கேற்கலாம்.கேள்வி - பதில் நேரத்தில், சிறந்த கேள்விகள் கேட்கும் மாணவர்களுக்கு, சிறப்பு பரிசு காத்திருக்கிறது.வெற்றிக்கான ரகசியங்களை அறியும் இந்த அற்புத நிகழ்ச்சியில் பங்குபெறுங்கள்! பொதுத்தேர்வில் மட்டுமின்றி, வாழ்க்கையிலும் சாதனையாளர் ஆகுங்கள்!நிகழ்ச்சிக்கு, முதலில் வரும், 1,000 மாணவர்களுக்கு, முக்கிய குறிப்புகள், வினாக்கள் அடங்கிய புத்தகம் மற்றும் வழிகாட்டி புத்தகம் இலவசமாக வழங்கப்படுகிறது. முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், இருக்கை ஒதுக்கப்படும்.
நாளை கடைசி!
நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், தங்கள் பெயர், மொபைல் எண் ஆகியவற்றை, 98409 45684 அல்லது 90804 40667 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ்., அல்லது வாட்ஸ் ஆப் அனுப்பலாம். நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி இலவசம். முன்பதிவு செய்தவர்கள், காலை, 9:00 மணிக்குள் அரங்கிற்குள் இருக்க வேண்டும்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X