எண்ணுார்:எர்ணாவூர் மேம்பாலம் அருகே, ரயிலில் அடிபட்டு, ஆந்திராவைச் சேர்ந்த இருவர் பலியாகினர்.சென்னை, விம்கோ நகர் - கத்திவாக்கம் ரயில் நிலையம் இடையே, எர்ணாவூர் மேம்பாலம் அருகே, நேற்று முன்தினம் இரவு, இருவர் ரயிலில் அடிபட்டு, இறந்த நிலையில் கிடப்பதாக, ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.கொருக்குபேட்டை ரயில்வே போலீசார், இரு சடலங்களையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பினர்.இறந்தவர்கள், ஆந்திராவைச் சேர்ந்த குமார், 28, கங்கனா, 70, என தெரியவந்தது. ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்தனரா, தண்டவாளத்தை கடக்கும் போது, ரயிலில் அடிபட்டு இறந்தனரா என்ற கோணத்தில், போலீசார் விசாரிக்கின்றனர்.