சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவை அதிகாரி வீட்டில் ரெய்டு

Added : நவ 28, 2019
Advertisement
 கோவை அதிகாரி வீட்டில்  ரெய்டு

ஊட்டி : கோவை பொதுப்பணித்துறை இன்ஜினியரின், ஊட்டி வீட்டில், லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தி, ஆவணங்கள் கைப்பற்றினர்.

கோவையில், பொதுப்பணித்துறை (கட்டடங்கள்) உதவி செயற்பொறியாளராக பணிபுரிபவர் ரத்தினவேல், 49. ஊட்டி சர்ச்சில் பகுதியில் உள்ள வீட்டில், இவரது குடும்பத்தினர் தங்கியுள்ளனர். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், இவர் மீது, லஞ்ச ஒழிப்பு துறையினர், நவ., 15ல் வழக்குப்பதிவு செய்தனர்.அதனடிப்படையில், லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., தட்ஷிணாமூர்த்தி உத்தரவின் படி, இன்ஸ்பெக்டர் கீதாலட்சுமி, எஸ்.ஐ., ரங்கநாதன் உட்பட குழுவினர், நேற்று மாலை, 5:00 மணியளவில் சோதனையில் ஈடுபட்டனர்;

இரவு, 8:15 மணி வரை சோதனை நடந்தது.இன்ஸ்பெக்டர் கீதாலட்சுமி கூறுகையில், ''ரத்தினவேல், ஊட்டியில் பணிபுரிந்த போது, அவர் மீது ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது; அதன்படி, சோதனை நடத்தப்பட்டது. சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மற்ற விபரங்கள், பின்பு தெரிவிக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X