பொது செய்தி

தமிழ்நாடு

மனித கழிவுகளை அகற்ற 6 ரோபாடிக் இயந்திரங்கள்

Added : நவ 28, 2019
Advertisement

சென்னை:''சென்னையில், மனித கழிவுகளை அகற்ற, அதிநவீன ரோபாடிக் இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்படும்,'' என, மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் கூறினார்.
சமூக பங்களிப்பு நிதியின் கீழ், 'ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா' வங்கி, 14 லட்சம் ரூபாய் மதிப்பில், பேட்டரியால் இயங்கும், 14 மூன்று சக்கர வாகனங்களை, மாநகராட்சிக்கு வழங்கியுள்ளது. இந்த வாகனங்களின் செயல்பாட்டை, ரிப்பன் மாளிகையில், கமிஷனர் பிரகாஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த வாகனங்கள், ராயபுரம் மண்டலத்தில் பயன்படுத்தப்பட உள்ளது.

மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் கூறியதாவது:சென்னையில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பை, உரம் மற்றும் பயோ காஸ் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. நான்கு இடங்களில், பயோ காஸ் தயாரிக்கும் நிலையங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதில், 400 டன் மக்கும் குப்பை பயன்படுத்தப்படுகிறது. மேலும், 1,000 டன் வரை உரம் தயாரிக்கப்படுகிறது. இவை, திருவள்ளூர் மாவட்டத்தில், 30 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு, 1 டன், 1,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.பேட்டரியால் இயங்கக்கூடிய, 411 மிதிவண்டி வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. துப்புரவு பணியில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் முழுதும், பேட்டரியால் இயங்கக்கூடியதாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இந்த வங்கி போல், பெரு நிறுவனங்கள், சமூக பங்களிப்பு நிதியில் உதவி செய்ய முன்வர வேண்டும்.மனித கழிவுகளை, மனிதனே அள்ளும் நிலை மாநகராட்சியில், முற்றிலும் ஒழிக்கப்படும். இதற்காக, ஆறு அதிநவீன ரோபாடிக் இயந்திரங்கள் வாங்கப்பட உள்ளன.சென்னையில், இம்மாதம், 'டெங்கு' காய்ச்சல் தாக்கம் குறைந்துள்ளது. இந்த மாதத்தில், இதுவரை, 100 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X