பொது செய்தி

தமிழ்நாடு

'வோல்ட்பெக் ஹோம் அப்ளையன்ஸ் சர்வே'

Added : நவ 28, 2019
Advertisement

சென்னை:இந்தியாவில், 'ஏசி' சாதனங்கள் விற்பனையில் முன்னணியில் உள்ள, வோல்டாஸ் நிறுவனமும், ஐரோப்பிய நாடுகளில், நுகர்வோர் சாதனங்கள் விற்பனையில் முன்னணியில் உள்ள, ஆர்க்லிக் நிறுவனமும் இணைந்து, 'வோல்ட்பெக் ஹோம் அப்ளையன்ஸ்' என்ற கூட்டு நிறுவனத்தை துவக்கியுள்ளன.

இந்நிறுவனம், நாடு முழுதும், 25 - 55 வயது வரை உள்ள அம்மாக்கள், வீடுகளில், ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளும் வேலைப்பளு தொடர்பாக, ஆய்வு நடத்தியுள்ளது. அதில், 50 சதவீத அம்மாக்கள், மற்ற நாட்களை விட, ஞாயிற்றுக்கிழமைகளில், கூடுதல் வேலைகளை மேற்கொள்வதாக தெரியவந்துள்ளது. இதற்கு, வரும் வாரத்தில், என்னென்ன வேலைகளை செய்யலாம் என, அவர்கள் திட்ட மிட்டு, அதற்காக தயாராவதே காரணம்.மேலும், 33 சதவீத அம்மாக்கள், ஞாயிற்றுக்கிழமைகளிலும், காலை, 6:00 மணி முதல், 7:00 மணிக்குள் துாக்கம்கலைகின்றனர்.ஆய்வில், 4 சதவீத அம்மாக்கள் மட்டுமே, ஞாயிற்றுக்கிழமைகளில், கணவர்கள், நண்பர்களுடன், வெளியில் உணவு சாப்பிடசெல்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X