பொது செய்தி

தமிழ்நாடு

100 சதவீதம் ஓட்டுப்பதிவுக்காக மாணவர்களை பயன்படுத்த முடிவு

Added : நவ 28, 2019
Advertisement

திருச்சி :''வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, தேர்தலில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவை உறுதி செய்ய, பள்ளிகளில், 'எலக்ட்ரோல் லிட்ரசி கிளப்' அமைக்கப்பட உள்ளது,'' என, தமிழக தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.திருச்சி, தஞ்சை, விழுப்புரம் உட்பட, 12 மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகளான கலெக்டர்கள் ஆலோசனைக் கூட்டம், நேற்று திருச்சியில்நடந்தது.இதில் பங்கேற்ற, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, நிருபர்களிடம் கூறியதாவது: தேர்தலில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவுக்கு, வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்.இதற்காக, பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மூலம் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஓட்டளிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தி, வாக்காளர் சேர்க்கை மற்றும் ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.மாநில, மாவட்ட அளவில், அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்கள் மூலம், பள்ளிகளில் தேர்வு செய்யப்பட்ட பயிற்சியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.அவர்களைக் கொண்டு, 5,796 மேல்நிலைப் பள்ளிகள், 7,809 உயர்நிலைப் பள்ளிகளில், ஒன்பது முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களை ஒருங்கிணைத்து, 'எலக்ட்ரோல் லிட்ரசி கிளப்' அமைக்கப்படும்.இதன் மூலம் அவர்களுக்கு, எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு முறை மற்றும் ஓட்டுப்பதிவு அவசியம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.அதன்பின், அவர்கள் மூலமாக, குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.மேலும், வாக்காளர் பட்டியல் தயாரித்தல், சரி பார்த்தல் மற்றும் சேர்க்கை - நீக்கம் போன்ற பணிகளிலும், மாணவர்கள் ஈடுபடுத்தப்படஉள்ளனர்.வாக்காளர் சேர்க்கைக்கும், அலைபேசி செயலிபோன்ற வசதிகள் இருப்பதால், 100 சதவீதம் வாக்காளர் சேர்க்கை என்ற இலக்கை அடையமுடியும். இவ்வாறு, அவர்கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X