சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பைக்குகள் திருடி 'கைவரிசை' ஐந்து பேர் கும்பல் கைது

Added : நவ 28, 2019
Share
Advertisement
கோவை : கோவைக்கு பஸ்சில் வந்து, பைக்குகளை திருடி சென்று, பாகங்களை பிரித்து விற்பனை செய்து வந்த ஐந்து பேர் கும்பலை, போலீசார் கைது செய்தனர். கோவை மாநகரில், சில மாதங்களாக, விலை உயர்ந்த பைக்குகள் திருடப்படுவது அதிகரித்து வருகிறது. தனிப்படை அமைத்து, திருட்டில் ஈடுபடும் நபர்களை பிடிக்க, மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரண் உத்தரவிட்டார். மாநகர குற்றப்பிரிவு துணை கமிஷனர் உமா

கோவை : கோவைக்கு பஸ்சில் வந்து, பைக்குகளை திருடி சென்று, பாகங்களை பிரித்து விற்பனை செய்து வந்த ஐந்து பேர் கும்பலை, போலீசார் கைது செய்தனர்.

கோவை மாநகரில், சில மாதங்களாக, விலை உயர்ந்த பைக்குகள் திருடப்படுவது அதிகரித்து வருகிறது. தனிப்படை அமைத்து, திருட்டில் ஈடுபடும் நபர்களை பிடிக்க, மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரண் உத்தரவிட்டார். மாநகர குற்றப்பிரிவு துணை கமிஷனர் உமா மேற்பார்வையில், மத்திய பகுதி குற்றப்பிரிவு உதவி கமிஷனர் சந்திரசேகர் தலைமையில் தனிப்படையினர், தீவிர விசாரணை நடத்தினர்.கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் தகவலின் அடிப்படையில், தஞ்சாவூரை சேர்ந்த ஒரு கும்பல், கோவை வந்து பைக் திருட்டில் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டது.

தீவிர விசாரணை நடத்திய தனிப்படையினர், பைக் திருட்டில் ஈடுபட்டு வந்த, தஞ்சாவூரை சேர்ந்த சுதாகர், 23, அரவிந்தன், 23, இளவரசன், 24, பிரகாஷ், 23, சிவ செந்தில், 23 ஆகியோரை, நேற்று கைது செய்தனர்.தனிப்படை போலீசார் கூறுகையில், 'தஞ்சாவூரில் இருந்து பஸ் மூலம் கோவை வரும் இவர்கள், சாலையில் நடந்து சென்று நோட்டமிடுவர். பின், இரண்டு அல்லது மூன்று விலை உயர்ந்த பைக்குகளை திருடி, தஞ்சாவூர் சென்று, தனித்தனி பாகங்களாக பிரித்து விற்பனை செய்து வந்துள்ளனர். இவர்களிடம் இருந்து தற்போது வரை, டியூக், ஆர்1.5, ராயல் என்பீல்ட் போன்ற பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பத்து பைக்குகள் மீட்கப்பட்டுள்ளன' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X