சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லாரி - பைக் மோதி விபத்து மாணவர்கள் இருவர் பலி

Added : நவ 28, 2019
Share
Advertisement
திருப்பூர் : திருப்பூர் அருகே, லாரி மீது பைக் மோதியதில், கோவை கல்லுாரி மாணவர்கள் இருவர், சம்பவ இடத்திலேயே பலியாயினர்.சேலத்தை சேர்ந்த அரவிந்தகுமார், 20, நாமக்கல், ராசிபுரத்தை சேர்ந்த பிரதீப், 19 ஆகியோர், கோவை சரவணம்பட்டியில் உள்ள குமரகுரு பொறியியல் கல்லுாரியில், மூன்றாம் ஆண்டு படித்து வந்தனர். இருவரும், ஒரு பைக்கில் நேற்று மாலை, கோவையில் இருந்து சேலத்துக்கு சென்று

திருப்பூர் : திருப்பூர் அருகே, லாரி மீது பைக் மோதியதில், கோவை கல்லுாரி மாணவர்கள் இருவர், சம்பவ இடத்திலேயே பலியாயினர்.சேலத்தை சேர்ந்த அரவிந்தகுமார், 20, நாமக்கல், ராசிபுரத்தை சேர்ந்த பிரதீப், 19 ஆகியோர், கோவை சரவணம்பட்டியில் உள்ள குமரகுரு பொறியியல் கல்லுாரியில், மூன்றாம் ஆண்டு படித்து வந்தனர்.

இருவரும், ஒரு பைக்கில் நேற்று மாலை, கோவையில் இருந்து சேலத்துக்கு சென்று கொண்டிருந்தனர். மாலை, 5:30 மணியளவில், ஊத்துக்குளி, பல்லகவுண்டம்பாளையம் அருகே சென்ற போது, முன்னால் சென்றுக் கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இருவரும், ஹெல்மெட் அணிந்திருந்தும் படுகாயமடைந்ததால், சம்பவ இடத்திலேயே பலியாயினர். ஊத்துக்குளி போலீசார், இவர்களின் உடலை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்கு, பெருந்துறை அரசு மருத்துவமனை அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X