பொது செய்தி

தமிழ்நாடு

பராமரிப்பில்லாத சிறுவர் பூங்கா புதர்மண்டி கிடக்கும் அவலம்

Added : நவ 28, 2019
Advertisement
 பராமரிப்பில்லாத சிறுவர் பூங்கா புதர்மண்டி கிடக்கும் அவலம்

கொண்டஞ்சேரி:கொண்டஞ்சேரி ஊராட்சியில், பராமரிப்பில்லாத சிறுவர் பூங்கா, புதர்மண்டிக் கிடப்பதால், சிறுவர் - சிறுமியர் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது, கொண்டஞ்சேரி ஊராட்சி. இங்குள்ள, ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே, தனியார் நிறுவன பங்களிப்புடன், சிறுவர் பூங்கா, ஓராண்டுக்கு முன் அமைக்கப்பட்டது.சறுக்கு, ஊஞ்சல் உட்பட பல்வேறு விளையாட்டு உபகரணங்களுடன் அமைக்கப்பட்ட இந்த சிறுவர் பூங்காவை இப்பகுதியைச் சேர்ந்த சிறுவர் - சிறுமியர் பயன்படுத்தி வந்தனர்.இந்நிலையில் இந்த சிறுவர் பூங்கா போதிய பராமரிப்பு இல்லாததால், முட்புதர்கள் வளர்ந்து, புதர் மண்டி காணப்படுகிறது.இதனால், இந்த பூங்காவை பயன்படுத்த முடியாமல், சிறுவர் - சிறுமியர் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும், இந்த பூங்காவில், மழைநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்பதால், கொசு உற்பத்தி அதிகமாக உள்ளது.இதனால், இங்கு வரும் சிறுவர் - சிறுமியருக்கு, 'டெங்கு', மலேரியா போன்ற தொற்று நோய் ஏற்படும் அச்சம் ஏற்பட்டுள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட ஒன்றிய நிர்வாகத்தினர், சிறுவர் பூங்கா புதர்களை அகற்றவும், மழைநீரை வெளியேற்றவும், பூங்காவை சுற்றி வேலி அமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X