பொது செய்தி

தமிழ்நாடு

ஆந்திரா மகளிர் ஆணையம் பாக்யராஜ் பேச்சுக்கு கண்டனம்

Added : நவ 28, 2019 | கருத்துகள் (8)
Share
Advertisement
சென்னை, பெண்கள் குறித்த இயக்குனர் பாக்யராஜ் பேச்சுக்கு, ஆந்திரா மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.'கருத்துக்களை பதிவு செய்' படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற நடிகரும், இயக்குனருமான பாக்யராஜ், 'பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில், ஆண்கள் மட்டும் தவறு செய்யவில்லை; பாதிக்கப்பட்ட பெண்களிடமும் தவறு உள்ளது. ஊசி சம்மதிக்காமல்,
ஆந்திரா மகளிர் ஆணையம் பாக்யராஜ் பேச்சு,கண்டனம்

சென்னை, பெண்கள் குறித்த இயக்குனர் பாக்யராஜ் பேச்சுக்கு, ஆந்திரா மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.'கருத்துக்களை பதிவு செய்' படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற நடிகரும், இயக்குனருமான பாக்யராஜ், 'பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில், ஆண்கள் மட்டும் தவறு செய்யவில்லை; பாதிக்கப்பட்ட பெண்களிடமும் தவறு உள்ளது. ஊசி சம்மதிக்காமல், நுால் நுழையாது' என, பேசினார்.பாக்யராஜின் பேச்சுக்கு, பெண்கள் மத்தியில் கண்டனம் எழுந்த நிலையில், ஆந்திரா மாநில மகளிர் ஆணையத் தலைவி வாசிரெட்டி பத்மா, தமிழக மகளிர் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.அதில், 'ஒரு சில சம்பவத்தை சுட்டிக்காட்டி, ஒட்டுமொத்த பெண்களையும் அவமதிக்கும் வகையில், பாக்யராஜ் பேசியுள்ளார். அவர் மீது, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்' என, கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
narayanan iyer - chennai,இந்தியா
28-நவ-201913:03:13 IST Report Abuse
narayanan iyer இப்படி நடித்தால் பணம் தருகிறேன் என்கிறார்கள் . இவர்களும் நாங்கள் நடிக்கிறோம் என்கிறார்கள் பணம் சம்பாதிக்கிறார்கள் .மார்க்கெட் போகும்படி தெரிந்தால் உடனே ஆடை குறைப்புச்செய்து படம் எடுத்துபோடுகிறார்களா இல்லையா . அவருக்கு அனுபவம் கூடுதல் அதனால் ஊசி இடம் கொடுத்தால்தான் நூல் நுழையும் என்றார் . அப்படி இடம் கொடுக்காத எத்தனையோ பேர் வாய்ப்பை இழந்திருக்கிறார்கள் . பொதுவாக யாருக்கு கோவம் வரும் தவறு செய்பவர்களுக்குத்தான் . எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே . அவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அவர்கள் வளர்ந்தபின்தான் தெரியும் . வரிந்து காட்டிகொண்டுவரும் யாராவது பெண்களின் ஆடை குறைப்பு அவர்களால் இந்த சமுதாயம் பாழ்படுவதற்க்கு வருத்தம் தெரிவித்து இருக்கிறார்களா ???
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
29-நவ-201903:16:20 IST Report Abuse
meenakshisundaramபெண்களின் ஆடைக்குறைப்பு மற்றும் ஆடை அணியும் விதங்கள் குறித்து கருத்து தெரிவித்தால் அது எங்களின் சொந்த விஷயம் ,இதில் நீங்கள் யார் தலையிட என்று வழக்கு தொடுப்பவர்களும் மகளிர் பாதுகாப்பு என்றார் அப்பெயரில் கொடுமைகள் புரியவும் இங்கே நிறைய ஆட்கள் (?) உள்ளார்கள் .மேலும் இதே போல திரு .ஜேசுதாஸ் அவர்கள் பெண்கள் ஜீன்ஸ் அணிவதைப்பற்றி கருத்து கூறியவுடனேயே அவர் மேலே வழக்கு வேறு போடப்பட்டது.கோவில் சிலைகளைக்கூட காம கண் கொண்டு பார்க்கும் இன மானத்தலைவர்கள் வேறு மக்களை திசை திருப்பும் தமிழகத்தில் வாழ்வதுவும் ஒரு கூட்டமே அதை ஆதரிக்கவும் நிலை இருக்கையில் பாக்கியராஜ் அவர்கள் தனது சொந்தக்கருத்தைக் கூறியதா தவறாகப்படுகிறது? கோவிலின் அமைப்புகள் நமக்கு வியப்பையும் ஆச்சரியத்தையும் வெளிப்படுத்துவது மட்டுமின்றி பண்டைக்காலத்து தமிழனின் பொறி இயல் திறனையும் அன்றோ வெளிக்காட்டுகின்றன .அவன் எந்த பொறி இயல் கல்லூரியிலே சென்று பட்டம் படித்தான்?தனது படங்களிலே பாக்கிய ராஜ் சில நிதர்சனங்களை அருவருப்பின்றி படமாக காட்டியுள்ளதை மறுக்க முடியாது....
Rate this:
Cancel
Vijaya Raghav - chennai,இந்தியா
28-நவ-201910:50:44 IST Report Abuse
Vijaya Raghav இந்த அரசியல் வாதிகளும் திரைப்பட துறையில் இருப்பவர்களும் குறிப்பாக கதாநாயகர்கள் திரையில் கையை காலை ஆட்டிவிட்டு ஏதாவது உளறுகிறார்கள் காவல் துறையும் இவர்களை தண்டிப்பது இல்லை
Rate this:
Cancel
raja - Kanchipuram,இந்தியா
28-நவ-201907:26:06 IST Report Abuse
raja உண்மை தானே பேசினார். கவனமாக இருக்க சொன்னால் தவறா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X