பொது செய்தி

தமிழ்நாடு

அரக்கோணம் - கடற்கரை ரயில் திருத்தணி வரை நீட்டிக்க மனு

Added : நவ 28, 2019
Advertisement

திருத்தணி:அரக்கோணம் - சென்னை கடற்கரை வரை இயக்கப்படும் மின்சார ரயில், திருத்தணி ரயில் நிலையத்தில் இருந்து, இயக்க வேண்டும் என, அரக்கோணம் எம்.பி., ஜெகத்ரட்சகன், அமைச்சரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

திருத்தணி நகராட்சி அலுவலகம் மற்றும் ஒன்றிய அலுவலகத்தில், அரக்கோணம் எம்.பி., ஜெகத்ரட்சகன், மக்கள் குறை கேட்டறிந்தார்.அப்போது, திருத்தணி ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்கறிஞர்கள், முன்னாள் நகர்மன்ற துணை தலைவர் ரகுநாதன், பா.ஜ. பிரமுகர் மில்காமுத்து ஆகியோர், எம்.பி.,யிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.மனுவில், காலையில் சென்னை கடற்கரை - அரக்கோணம் வரை இயக்கப்படும் விரைவு ரயில், திருத்தணி ரயில் நிலையம் வரை நீட்டிக்க வேண்டும்.அதேபோல், சென்னை புறநகர் ரயில் நிலையத்தில் இருந்து, காலை, 7:00 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், காலை, 9:15 மணிக்கு, திருத்தணி வந்தடைந்தது.ஆனால், சில மாதங்களாக இந்த மின்சார ரயில், காலை, 7:35 மணிக்கு புறப்பட்டு, காலை, 9:50 மணிக்கு, திருத்தணிக்கு வருகிறது.இந்த ரயிலில், அதிகளவில் அரசு மற்றும் தனியார் அலுவலக ஊழியர்கள் வருகின்றனர். ஆகையால், பழையப்படியே மின்சார ரயில் நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என, கூறப்பட்டிருந்தது.இதே கருத்தை, எம்.பி., ஜெகத்ரட்சகன் மனுவாக, மத்திய ரயில்வே அமைச்சரிடம் கொடுத்தார். அமைச்சர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X