சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விஷ விதையை சாப்பிட்ட 7 மாணவர்கள் மயக்கம்

Added : நவ 28, 2019
Advertisement

சிவகங்கை, சிவகங்கையில் பள்ளி அருகே விஷ விதைகளை சாப்பிட்டதில், வாந்தி, மயக்கமடைந்த 7 மாணவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே வலையராதினிபட்டி ஸ்ரீராம் மகன் கதிர்நிலவன் 4, பாகமுத்து மகன் ஜெகதீஷ் 6, பிரபு மகள் தர்ஷினி 4, திருமண்பட்டி முருகேசன் மகன் மனோஜ் சாரதி 4, மதகுபட்டி கீழத்தெரு மலைச்சாமி மகன் நிரஞ்சன் 4, கவின் 6, ரவிக்குமார் மகன் முகிலன் 8. இவர்கள் அனைவரும் வலையராதினிபட்டி அரசு துவக்கப்பள்ளியில் படிக்கின்றனர். நேற்று பகல் 1:30 மணிக்கு மதிய உணவு இடைவேளைக்கு பின், பள்ளிக்கு அருகே இருந்த அடர்ந்த செடி பகுதிக்கு சென்றனர். செடியில் இருந்த விதைகளை சாப்பிட்டனர். அதற்கு பின் அவர்கள் வாந்தி எடுத்து மயங்கினர். ஆசிரியர்கள், சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மதகுபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X