துப்புரவாளர் பணிக்கு பட்டதாரிகளும் விண்ணப்பம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

துப்புரவாளர் பணிக்கு பட்டதாரிகளும் விண்ணப்பம்

Updated : நவ 28, 2019 | Added : நவ 28, 2019
Share
கோவை : கோவை மாநகராட்சியில், காலியாக உள்ள, 549 துப்புரவு பணியாளர் பணிக்கு, 7,300 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான நேர்காணல் நேற்று துவங்கியது. இதற்கு, பட்டதாரிகள் முதல் இன்ஜி., வரை பலரும் விண்ணப்பித்துள்ளனர்.கோவை நகர் பகுதியில், குப்பை சேகரிக்க, 250 வீடுகளுக்கு ஒருவர், தள்ளுவண்டி தள்ள ஒருவர், மழை நீர் வடிகால் துார்வார ஒருவர் என, மூவரை நியமிக்க வேண்டும். இதன்படி, 6,000
துப்புரவாளர் பணிக்கு  பட்டதாரிகளும் விண்ணப்பம்

கோவை : கோவை மாநகராட்சியில், காலியாக உள்ள, 549 துப்புரவு பணியாளர் பணிக்கு, 7,300 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இவர்களுக்கான நேர்காணல் நேற்று துவங்கியது. இதற்கு, பட்டதாரிகள் முதல் இன்ஜி., வரை பலரும் விண்ணப்பித்துள்ளனர்.கோவை நகர் பகுதியில், குப்பை சேகரிக்க, 250 வீடுகளுக்கு ஒருவர், தள்ளுவண்டி தள்ள ஒருவர், மழை நீர் வடிகால் துார்வார ஒருவர் என, மூவரை நியமிக்க வேண்டும். இதன்படி, 6,000 துப்புரவு தொழிலாளர்கள் தேவை. ஆனால், நிரந்தர தொழிலாளர்களாக, 2,520, ஒப்பந்த தொழிலாளர்களாக, 2,308 பேர் உள்ளனர்.

இதனால், முதற்கட்டமாக, 549 துப்புரவு தொழிலாளர் பணியிடங்களை நிரப்ப, அறிவிப்பு வெளியிடப்பட்டது.தமிழில் எழுத, படிக்க தெரிந்திருந்தால் போதும். 21 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்; உச்ச வரம்பில்லை; அனைத்து ஜாதியினரும் விண்ணப்பிக்கலாம் என, மாநகராட்சி அறிவித்தது. 15 நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டது. மொத்தம், 7,300 விண்ணப்பங்கள் வந்திருந்தன. அதனால், நேர்காணல் நடத்தி, அவற்றை பரிசீலிக்க முடிவு செய்யப்பட்டது.

டவுன்ஹாலில் உள்ள மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், நேற்று நேர்காணல் துவங்கியது; 3,000 விண்ணப்பதாரருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. உதவி கமிஷனர் அந்தஸ்திலான அதிகாரிகள் கொண்ட, 10 குழுவினர், தலா, 300 பேரிடம் நேர்காணல் நடத்தினர்; பட்டதாரிகள் மட்டுமின்றி, இன்ஜினியரிங் முடித்தவர்களும் பங்கேற்றனர்.மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, 'துப்புரவு பணிக்கு படிப்பு அவசியமில்லை. அதனால், கல்வி சான்று சரிபார்ப்பதில்லை.

நேர்காணல் முடிந்தபின், விண்ணப்பதாரரின் தகவல், கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்படும். இடஒதுக்கீடு அடிப்படையில் விண்ணப்பங்கள் பிரிக்கப்படும். தற்போது துப்புரவு பணிக்கே ஆட்கள் தேவை. அதற்கு தகுதியானவர்களை கண்டறிந்து, பணியிடம் வழங்கப்படும்' என்றனர். நேர்காணல், இன்றும், நாளையும் தொடர்ந்து நடக்கிறது.நேர்காணலுக்கு வர இயலாதவர்கள், நாளை மதியம், 2:00 மணிக்கு பங்கேற்கலாம் என, மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X