பொது செய்தி

தமிழ்நாடு

உணவுப்பொருள் சாகுபடி ஆய்வுக்கு அரசு உத்தரவு

Added : நவ 28, 2019
Advertisement

சென்னை :உணவு பொருட்கள் சாகுபடி பரப்பை அதிகரிக்க, மண்டல வாரியாக ஆய்வு கூட்டங்களை நடத்தும்படி, வேளாண்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில், நெல் உள்ளிட்ட உணவு தானியங்கள், எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள் மற்றும் சிறுதானியங்கள் சாகுபடி நடந்து வருகிறது. இவற்றின் சாகுபடி பரப்பை, 1.17 கோடி ஏக்கராக அதிகரிக்க, அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதுவரை, 79.8 லட்சம் ஏக்கர் சாகுபடி நடந்துள்ளது.சாகுபடி பரப்பை உயர்த்தவும், இதற்காக மண்டல வாரியாக ஆய்வு கூட்டங்களை நடத்தவும், வேளாண்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.அரசின் உத்தரவை அடுத்து, முதல் ஆய்வு கூட்டம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில், காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலுார், திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த, வேளாண்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். அதிகாரிகளுக்கு, வேளாண் துறை இயக்குனர் தட்சிணாமூர்த்தி பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.இதைத் தொடர்ந்து, திருச்சி, சேலம், கோவை ஆகிய இடங்களில், மண்டல ஆய்வு கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளனர். விவசாயிகளை, அவர்களின் வசிப்பிடம் மற்றும் சாகுபடி நிலத்திற்கு சென்று சந்தித்து, சாகுபடி உதவிகள் வழங்க, உத்தரவாதம் அளிக்க வேண்டும் என, இக்கூட்டத்தில் அறிவுறுத்தப் பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X