சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கார் கண்ணாடி உடைத்து ரூ.5 லட்சம் கொள்ளை

Added : நவ 28, 2019
Share
Advertisement
பல்லடம் : டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளரின் கார் கண்ணாடியை உடைத்து, ரூ.5 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த குங்குமப்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன், 46; டெக்ஸ்டைல்ஸ் நிறுவன உரிமையாளர். நேற்று காலை, பல்லடம் - திருச்சி சாலையில், பாங்க் ஆப் பரோடா கிளையில், 6 லட்சம் எடுத்து கொண்டு, காரில், மேற்கு பல்லடம் நியூ

பல்லடம் : டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளரின் கார் கண்ணாடியை உடைத்து, ரூ.5 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த குங்குமப்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன், 46; டெக்ஸ்டைல்ஸ் நிறுவன உரிமையாளர். நேற்று காலை, பல்லடம் - திருச்சி சாலையில், பாங்க் ஆப் பரோடா கிளையில், 6 லட்சம் எடுத்து கொண்டு, காரில், மேற்கு பல்லடம் நியூ எக்ஸ்டன்சன் வீதிக்கு சென்றார். அங்கு காரை நிறுத்திவிட்டு, முன்பக்க லாக்கரில், 5 லட்சத்தை வைத்து விட்டு, ஒரு லட்சம் ரூபாயை, ஸ்டேட் வங்கி கிளையில் செலுத்த சென்றார்.

திரும்பி வந்து பார்த்தபோது, காரின் இடதுபக்க கண்ணாடி மற்றும் முன்பக்க லாக்கரை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிந்தது. பல்லடம் இன்ஸ்பெக்டர்கள் சுஜாதா, ரமேஷ்கண்ணன், சம்பவ இடத்தில் விசாரித்தனர்.போலீசார் கூறுகையில், 'கொள்ளை நடந்த இடத்தில், மூன்று வங்கிகள் இருந்தாலும், 'சிசிடிவி' கேமராக்கள், வங்கியின் நுழைவுப்பகுதியை மட்டுமே மையப்படுத்தியுள்ளதால், கொள்ளையர்கள் தொடர்பான 'சிசிடிவி' காட்சிகள் கிடைக்கவில்லை. கிடைத்த காட்சிகளை கொண்டு, கொள்ளையர்களை தேடி வருகிறோம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X