சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லஞ்சம் வாங்கி கைதான அதிகாரி 'சஸ்பெண்ட்'

Added : நவ 28, 2019
Share
Advertisement
கோவை : கோவை, ஆவாரம்பாளையத்தை சேர்ந்தவர் பாலதண்டாயுதபாணி, 60. இவர் நல்லாம்பாளையம் பகுதியில் பெட்ரோல் பங்க் அமைக்க, தடையின்மை சான்று கேட்டு கோவை மாவட்ட தீயணைப்பு அதிகாரி பாலசுப்ரமணியம், 52, என்பவரை அணுகினார். அப்போது தடையின்மை சான்று வழங்க, 40 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக தீயணைப்பு அதிகாரி கேட்டார். இதற்கு சம்மதம் தெரிவித்த பாலதண்டாயுதபாணி, லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார்

கோவை : கோவை, ஆவாரம்பாளையத்தை சேர்ந்தவர் பாலதண்டாயுதபாணி, 60. இவர் நல்லாம்பாளையம் பகுதியில் பெட்ரோல் பங்க் அமைக்க, தடையின்மை சான்று கேட்டு கோவை மாவட்ட தீயணைப்பு அதிகாரி பாலசுப்ரமணியம், 52, என்பவரை அணுகினார்.
அப்போது தடையின்மை சான்று வழங்க, 40 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக தீயணைப்பு அதிகாரி கேட்டார். இதற்கு சம்மதம் தெரிவித்த பாலதண்டாயுதபாணி, லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். போலீசாரின் அறிவுறுத்தலின்படி, கடந்த, 9ம் தேதி லஞ்ச பணத்துடன் சென்று தீயணைப்பு அதிகாரியை சந்தித்தார்.லஞ்ச பணத்தை பாலசுப்ரமணியம் வாங்கியபோது, லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கையும், களவுமாக கைது செய்யப்பட்டார். பின், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.இவர் மீது துறை ரீதியிலான விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிவில், பாலசுப்ரமணியத்தை சஸ்பெண்ட் செய்து, தமிழக அரசு கூடுதல் செயலர் நிரஞ்சன் மார்டி நேற்று உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X