பொது செய்தி

தமிழ்நாடு

அரசு போக்குவரத்து பணிமனையை ஜப்தி செய்ய நகராட்சி நிர்வாகம் முடிவு

Added : நவ 28, 2019
Advertisement

திருத்தணி:நகராட்சிக்கு நிர்வாகத்திற்கு, 69.41 லட்சம் ரூபாய் தொழில் வரி செலுத்தாத, திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனையை, ஜப்தி செய்ய நிர்வாகம் தீர்மானித்துஉள்ளது.
திருத்தணி நகராட்சி, அரக்கோணம் சாலையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக திருத்தணி பணிமனை இயங்கி வருகிறது.இங்கு, 330க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இப்பணிமனையில் பணிபுரியும் ஊழியர்கள், நகராட்சிகள் சட்டத்தின்படி, ஆறு மாதத்திற்கு ஒரு முறை தொழில் வரி, நகராட்சிக்கு செலுத்த வேண்டும்.ஆனால், 2010 - -11ம் ஆண்டு முதல், இன்று வரை பணிமனை நிர்வாகம், ஊழியர்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் தொழில் வரியை, நகராட்சிக்கு செலுத்தாமல் உள்ளது.
இது குறித்து, திருத்தணி நகராட்சி ஆணையர் கா.ராஜலட்சுமி கூறியதாவது:திருத்தணி அரசு போக்குவரத்து கழக பணிமனை நிர்வாகம், ஒன்பது ஆண்டுகளாக, 69 லட்சத்து, 41 ஆயிரத்து, 327 ரூபாய் தொழில் வரியை, நகராட்சிக்கு செலுத்தாமல் மெத்தனம் காட்டி வருகிறது. பலமுறை கடிதம் அனுப்பியும், எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கியும், தொழில் வரியை செலுத்தவில்லை.மேலும், எங்களது ஊழியர்கள் பணிமனை அதிகாரியிடம் நேரில் சென்றும் செலுத்தவில்லை. ஆகையால், இம்மாதம், 21ம் தேதி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கும், திருத்தணி பணிமனைக்கும் இறுதி நோட்டீஸ் வழங்கி, தொழில் வரி கட்ட தவறும்பட்சத்தில், நகராட்சிகள் சட்டத்தின் படி, ஒரு வாரத்திற்குள், ஜப்தி செய்யப்படும் என, எச்சரித்துஉள்ளோம்.இந்த வாரத்திற்குள் தொகை செலுத்தாவிட்டால், பணிமனையை ஜப்தி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X