சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொடைக்கானல் ரோட்டில் நிலச்சரிவு: 5 கி.மீ., நடந்து சென்ற மக்கள்

Added : நவ 28, 2019
Share
Advertisement
கொடைக்கானல் :கொடைக்கானல் அடுக்கம்-பெரியகுளம் ரோட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் மக்கள் 5 கி.மீ.,க்கு நடந்தே சென்றனர்.கொடைக்கானலுக்கு மாற்று வழித்தடமான அடுக்கம் ரோட்டை மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது.இருப்பினும் பெரியகுளம் வரை இலகு ரக வாகனங்களில் பயணிகள் சென்று வருகின்றனர். அடுக்கம், பாலமலை, சாமக்காட்டுபள்ளம் பகுதியினர் சரக்கு
கொடைக்கானல் ரோட்டில் நிலச்சரிவு: 5 கி.மீ., நடந்து சென்ற மக்கள்

கொடைக்கானல் :கொடைக்கானல் அடுக்கம்-பெரியகுளம் ரோட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் மக்கள் 5 கி.மீ.,க்கு நடந்தே சென்றனர்.கொடைக்கானலுக்கு மாற்று வழித்தடமான அடுக்கம் ரோட்டை மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது.இருப்பினும் பெரியகுளம் வரை இலகு ரக வாகனங்களில் பயணிகள் சென்று வருகின்றனர். அடுக்கம், பாலமலை, சாமக்காட்டுபள்ளம் பகுதியினர் சரக்கு வாகனங்களில் விளைபொருள்களை கொண்டு செல்ல,போக்குவரத்திற்கு இந்த ரோட்டை பயன்படுத்துகின்றனர்.கடந்த மாதம் கனமழையின் போது ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில்நிலச்சரிவுஏற்பட்டுராட்சத பாறைகள் உருண்டன. ஆபத்தான இந்த ரோட்டில் போக்குவரத்தை தொடர வேண்டாம் என நெடுஞ்சாலை துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நேற்று அதிகாலை மழை பெய்த போது கொய்யாதோப்பு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதில்ரோடு துண்டிக்கப்பட்டது. நிலச்சரிவை அப்புறப்படுத்தும் பணி நடக்கிறது.அதனால் விவசாயிகள், கிராமமக்கள் 5 கி.மீ., நடந்தே சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X