பொது செய்தி

தமிழ்நாடு

'நிப்ட் -டீ' கல்லுாரிக்கு 4வது ஆண்டாக தங்கம்

Added : நவ 28, 2019
Advertisement

திருப்பூர் : நான்காவது ஆண்டாக, திருப்பூர் 'நிப்ட் - டீ' கல்லுாரிக்கு, 'அசோசெம்' சார்பில், சிறந்த திறன் பயிற்சி நிறுவனத்துக்கான, தங்க கோப்பை பரிசு கிடைத்துள்ளது.

டில்லியில் நேற்று இந்திய தொழில் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பு (அசோசெம்) சார்பில் நடந்த விழாவில், சிறந்த திறன் மேம்பாட்டு பயிற்சி நிறுவனத்துக்கான பிரிவில், திருப்பூர் முதலிபாளையம், 'நிப்ட்-- டீ' கல்லுாரிக்கு, தங்க கோப்பை வழங்கப்பட்டது.கல்லுாரியின் திறன் மேம்பாட்டு துறை சேர்மன் மோகனசுந்தரம், துறை தலைவர் சிவஞானம் ஆகியோரிடம், மத்திய திறன் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே, இணை அமைச்சர் ராஜ்குமார், தங்க கோப்பையை வழங்கினர்.

கல்லுாரி நிர்வாகத்தினர் கூறுகையில், '2016ல் சிறந்த பெண்கள் திறன் மேம்பாடு; 2017ல், சிறந்த பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு பெற்றுத்தரும் நிறுவனம்; 2018ல், சிறந்த திறன் பயிற்சி நிறுவன பிரிவுகளில், தங்க கோப்பை பரிசு பெற்றுள்ளோம். ஆடை வடிவமைப்பு சார்ந்த பாடப்பிரிவுகளை செயல்படுத்துவதோடு, மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்களை பயன்படுத்தி, தமிழகம் முழுவதும், இதுவரை, 25 ஆயிரம் பேருக்கு திறன் பயிற்சி அளித்து, பணி அமர்த்தியுள்ளோம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X