கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தாய், மகனுக்கு ஆயுள்தண்டனை

Added : நவ 28, 2019
Advertisement

துாத்துக்குடி, கள்ளக்காதல் தகராறில் தொழிலாளியை கொலை செய்த தாய், மகனுக்கு துாத்துக்குடி நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்தது.தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை சேர்ந்தவர் சண்முகம் 50. கூலித் தொழிலாளி. இவரது உறவினர் முருகேசன் 55. இவருக்கும், சண்முகத்தின் மனைவி வள்ளியம்மாளுக்கும் இடையே தகாத உறவு இருந்தது. ஆத்திரமுற்ற சண்முகம், முருகேசனை 2016 நவம்பரில் அரிவாளால் வெட்டினார். இதில் முருகேசன் காயமுற்றார். சண்முகம் கைதானார். ஜாமினில் வந்த சண்முகம் 2017 ஜன., 23ல் வீட்டில் துாங்கிகொண்டிருந்தார். அங்கு வந்த முருகேசன், அவரது தாயார் செல்வி 72, சண்முகம் மீது மண்ணெண்னை ஊற்றி எரித்துக் கொலை செய்தனர். கோவில்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். முருகேசனும் தாயாரும் கைது செய்யப்பட்டனர். வழக்கு துாத்துக்குடி 2வது மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. நீதிபதி கவுதமன், இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X