பொது செய்தி

தமிழ்நாடு

புதிய தடுப்பணை!புதுமாவிலங்கை கூவம் ஆற்றில் ரூ.7.80 கோடியில்... 2,250 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெறும்... பல இடங்களில் அமைக்கவும் திட்ட அறிக்கை தயார்

Added : நவ 28, 2019
Share
Advertisement
கடம்பத்துார்:கடம்பத்துார் அருகே, கூவம் ஆற்றின் குறுக்கே, 7.80 கோடி ரூபாயில், புதிய தடுப்பணை கட்டப்பட உள்ளது. 'இந்த தடுப்பணையில் சேகரமாகும் தண்ணீரால், 2,250 ஏக்கர் விளை நிலங்கள் பயன்பெறும். மேலும், பல இடங்களில் தடுப்பணை கட்ட, திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது' என, பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் அடுத்த, கேசாவரம்
 புதிய தடுப்பணை!புதுமாவிலங்கை கூவம் ஆற்றில் ரூ.7.80 கோடியில்... 2,250 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெறும்... பல இடங்களில் அமைக்கவும் திட்ட அறிக்கை தயார்

கடம்பத்துார்:கடம்பத்துார் அருகே, கூவம் ஆற்றின் குறுக்கே, 7.80 கோடி ரூபாயில், புதிய தடுப்பணை கட்டப்பட உள்ளது.

'இந்த தடுப்பணையில் சேகரமாகும் தண்ணீரால், 2,250 ஏக்கர் விளை நிலங்கள் பயன்பெறும். மேலும், பல இடங்களில் தடுப்பணை கட்ட, திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது' என, பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் அடுத்த, கேசாவரம் அணைக்கட்டு பகுதியில், கூவம் ஆறு உருவாகிறது.இந்த கூவம் ஆறு, பேரம்பாக்கம், சத்தரை, கடம்பத்துார், மணவாள நகர், புட்லுார், அரண்வாயல் வழியாக, 72 கி.மீ., ஓடி, சென்னையில், நேப்பியர் பாலம் அருகே, வங்கக் கடலில் கலக்கிறது.ஆற்றில், கேசவபுரம் அணை, புட்லுார், அரண்வாயல், பருத்திபட்டு, ஜமீன்கொரட்டூர் ஆகிய இடங்களில் மட்டும் தடுப்பணைகள் உள்ளன.இதில், ஜமீன்கொரட்டூர், அரண்வாயல் தடுப்பணைகள் சேதமடைந்துள்ளன. இதனால், மழை நீரை அவற்றில் தேக்கி வைக்க முடியவில்லை.நிலத்தடி நீர் உயரும்வீணாகும் நீரை தடுக்க வேண்டும் என்ற நோக்கில், ஆறுகளின் குறுக்கே, முக்கிய இடங்களில், தடுப்பணை அமைக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, கூவம் ஆற்றில் தடுப்பணைகள் கட்ட, பொதுப்பணித் துறையினர், தமிழக அரசுக்கு திட்ட அறிக்கை தயார் செய்து அனுப்பினர்.இதில், புதுமாவிலங்கை - பிஞ்சிவாக்கம் இடையே, 7.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய தடுப்பணை கட்ட, அரசு அனுமதி அளித்துள்ளதாக, பொதுப்பணித் துறை நிர்வாக செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, பொதுப்பணித் துறை நிர்வாக செயற்பொறியாளர் பழனிசாமி கூறியதாவது:கடம்பத்துார் ஒன்றியம், புதுமாவிலங்கை கூவம் ஆற்றின் குறுக்கே, புதிய தடுப்பணை கட்டப்பட உள்ள இடம், ஆய்வு செய்யப்பட்டு உள்ளது.தடுப்பணை, 100 மீட்டர் நீளம், 2 மீட்டர் உயரம் மற்றும் 75 செ.மீட்டரில், நவீன தானியங்கி இரும்பு மதகு வசதிகளுடன் அமைகிறது.தடுப்பணையில் சேகரமாகும் தண்ணீரால், இப்பகுதியைச் சுற்றியுள்ள, 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள கிணறுகள், ஆழ்துளை கிணறுகளில் நீர் ஆதாரம் பெருகும். இதனால், 2,250 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்.ரூ.67.5 கோடி நிதிகூவம் ஆற்றில் தடுப்பணை அமையவுள்ள பகுதியில், 'சர்வே' பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகள் முடிவடைந்ததும், தடுப்பணை கட்டும் பணிகள் துவங்கி, ஓராண்டுக்குள் முடிக்கப்படும்.இதேபோல் கூவம் ஆற்றின் குறுக்கே, சேதமடைந்த ஜமீன்கொரட்டூர் தடுப்பணையை சீரமைக்க, 35.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.தவிர, அரண்வாயல், பேரம்பாக்கம், அதிகத்துார், சேரஞ்சேரி ஆகிய பகுதிகளில் தலா, 8 கோடி ரூபாய் என, மொத்தம், 67.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தடுப்பணைகள் அமைக்க, திட்ட அறிக்கை தயாரித்து அனுப்பப்பட்டு உள்ளது.கொசஸ்தலை மற்றும் ஆரணி ஆற்றிலும் தடுப்பணைகள் கட்ட, திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X