பொது செய்தி

தமிழ்நாடு

மாணவ - மாணவியர் வெற்றிக்கு டிச.,1 நிகழ்ச்சியில் கலெக்டர் மகேஸ்வரி சிறப்புரை

Added : நவ 28, 2019
Advertisement
 மாணவ - மாணவியர் வெற்றிக்கு  டிச.,1 நிகழ்ச்சியில் கலெக்டர் மகேஸ்வரி சிறப்புரை

திருவள்ளூர்:புதிய பாடத்திட்டத்தில் பொதுத்தேர்வை எதிர்கொள்ளும், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள், தேர்வில் அதிக மதிப்பெண் பெற, தேவையான யுக்திகளை அள்ளித்தரும், 'சக்சஸ் மந்த்ரா' நிகழ்ச்சி நடத்தப்படுகிறது
'தினமலர்' நாளிதழ் சார்பில், டிச., 1ம் தேதி திருவள்ளூரில் நடைபெறும் நிகழ்ச்சியில், கலெக்டர் மகேஸ்வரி சிறப்புரையாற்றுகிறார்.புதிய பாடத்திட்டத்தில், பொதுத்தேர்வை எதிர்கொள்ளும், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, தேர்வில் அதிக மதிப்பெண் பெறவும், வாழ்க்கையில் சாதனை படைக்கவும், தன்னம்பிக்கை வளர்க்கும் வகையில், 'சக்சஸ் மந்த்ரா' நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.இந்த நிகழ்ச்சியை, 'தினமலர்' நாளிதழ் மற்றும், அமிர்தா விஸ்வ வித்யா பீடம் நிறுவனம் இணைந்து நடத்துகின்றன.திருவள்ளூர், சாந்தி திருமண மண்டபத்தில், டிசம்பர், 1ம் தேதி நடைபெற உள்ள இந்நிகழ்ச்சியில், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர், மகேஸ்வரி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, உரையாற்றுகிறார்.

நிகழ்ச்சியில், புதிய பாடத்திட்டத்தின் முக்கியத்துவம், அவற்றை அணுக வேண்டிய முறை, நுழைவுத் தேர்வுகளுக்கு, புதிய பாடத்திட்டத்தை பயன்படுத்தும் விதம் ஆகியவை குறித்து விளக்கப்படும்.மனப்பாடம் செய்யாமல் புரிந்து கற்பதன் பலன்கள், படிக்கும்போதே ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை வளர்ப்பதன் அவசியம், சுயகற்றல் மற்றும் ஆழ்ந்த கற்றலை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள், புத்தகத்தில் உள்ள, க்யூ.ஆர்.கோடு பயன்படுத்தும் வழிமுறை குறித்து, மாணவர்கள், நிகழ்ச்சியில் தெளிவு பெறலாம்.சுவாரசியம் குறையாமல் பாடங்களை படிக்கும் விதம், உடல்நலம் மற்றும் மனநலம் காக்கும் வழிமுறைகள், புதிய பாடத்திட்டத்தில், பொதுத்தேர்வு வினாக்கள் கேட்கப்படும் விதம் ஆகியவை அறியலாம்.

இதுமட்டுமின்றி, தேர்வுக் களத்தில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை குறித்தும், மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது.புதிய பாடத்திட்ட தயாரிப்பு குழுவைச் சேர்ந்த வல்லுனர்கள், அனுபவம் வாய்ந்த கல்வியாளர்கள், 'அமிர்தா விஸ்வ வித்யாபீடம்' நிறுவன பேராசிரியர்கள், தன்னம்பிக்கை பேச்சாளர்கள் பங்கேற்று, மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்குகின்றனர்.இந்நிகழ்ச்சிக்கு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள், பெற்றோர், அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்கலாம்.டிசம்பர், 1ம் தேதி, காலை, 8:00 முதல், மதியம், 1:00 மணி வரை, நடக்கும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவ -- மாணவியருக்கும், முக்கிய குறிப்புகள், வினாக்கள் அடங்கிய புத்தகம் இலவசமாக வழங்கப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X