பொது செய்தி

தமிழ்நாடு

அறிவியல் மையம் திறப்பு

Added : நவ 28, 2019
Advertisement
 அறிவியல் மையம் திறப்பு

பாக்கம்: திருவள்ளூர் அடுத்த, பாக்கம் அருகே உள்ள கசுவா கிராமத்தில் அமைந்துள்ளது, சேவாலயா தொண்டு நிறுவனம்.இங்குள்ள மகாகவி பாரதியார் மேல்நிலைப் பள்ளியில், 2,000க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.இப்பள்ளியில், தனியார் தொழிற்சாலை பங்களிப்புடன், அதிநவீன அறிவியல் மையம் அமைக்கப்பட்டு, அதன் திறப்பு விழா, நேற்று நடந்தது. தொழிற்சாலை நிர்வாக இயக்குனர் கிருஷ்ணன், இதை துவக்கி வைத்தார்.''இந்த அறிவியல் மையத்தை மாணவ - மாணவியர் நன்றாக பயன்படுத்தி, அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்,'' என, அவர் பேசினார்.
வன்கொடுமை தடுப்பு தினம்
திருவள்ளூர்: திருவள்ளுர் அடுத்த திருப்பாச்சூர் கல்லுாரியில், சமூக நலத்துறையின் ஒருங்கிணைந்த பெண்கள் வள மையம் சார்பாக, சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்கொடுமை களையும் தினம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் முத்துச்சாமி தலைமை வகித்தார்.கூட்டத்தில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் பெருகி வருவதால், பெண்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால், பெண்களுக்கான உதவி மைய இலவச தொலைபேசி எண்: '181'ஐ தொடர்பு கொள்ளலாம் என்பன போன்ற ஆலோசனைகள் வழங்கப்பட்டன.சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலரான, மூத்த உரிமையியல் நீதிபதி சரஸ்வதி, இது குறித்து விளக்கினார்.
பட்டா கோரி ஆர்ப்பாட்டம்
பொன்னேரி: பொன்னேரி வட்டத்தில், அரசு புறம்போக்கு நிலங்களில் வசிப்போர், கோவில் நிலங்களில் குடியிருப்போருக்கு, இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், நேற்று, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஆர்ப்பாட்டத்தின் முடிவில், பேரணியாக சென்று, பொன்னேரி தாசில்தார் அலுவலகத்தில், கோரிக்கை மனுக்களை அளித்தனர். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை தொடர்ந்து, அவர்கள் கலைந்து சென்றனர்
.ஊராட்சியை மேம்படுத்த கூட்டம்
புதுப்பட்டு: கடம்பத்துார் ஒன்றியம், புதுப்பட்டு ஊராட்சியின் வளர்ச்சி திட்டம் குறித்து, சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.ஊராட்சி செயலர் அசோப் ராஜ் முன்னிலை வகிக்க, அரசு நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் ரவிசந்திரன் தலைமை வகித்தார்.வரும், 2020ம் ஆண்டுக்குள், ஊராட்சி பகுதியில் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் மற்றும் ஊராட்சிகளை மேம்படுத்துவது குறித்து ஊராட்சி செயலர் விளக்கி பேசினார்.கூட்டத்தில், சுகாதாரத்துறை, வருவாய் துறை என, 21 துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் பங்கேற்று விவாதித்தனர். இதில், மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
நாளை சமூக தணிக்கை கூட்டம்
வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியம், படுநெல்லி, திருவங்கரணை, ஒழையூர், தாங்கி, ஊத்துக்காடு, திம்மராஜம்பேட்டை ஆகிய ஆறு ஊராட்சிகளில், நாளை காலை, 11:00 மணிக்கு, சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.கூட்டத்தில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் உள்ள குறை, நிறைகளை பதிவு செய்யலாம் என, வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்தார்.
பள்ளிக்கு உபகரணங்கள் வழங்கல்
ஆலப்பாக்கம்: வாலாஜாபாத் அடுத்த ஆலப்பாக்கம் அரசு நடுநிலைப் பள்ளிக்கு, வகுப்பறை மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.தனியார் தொழில் நிறுவன தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். தனியார் தொழில் நிறுவனம் மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் இணைந்து, குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம், விளையாட்டு உபகரணம், 'ஸ்மார்ட்' வகுப்பறை மற்றும் நான்கு சைக்கிள்களை வழங்கின.நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை மலர்விழி மற்றும் கிராம மக்கள் உடன் இருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X