பொது செய்தி

தமிழ்நாடு

அடிப்படை வசதி கேட்டு உண்ணாவிரதம்

Added : நவ 28, 2019
Advertisement
 அடிப்படை வசதி கேட்டு உண்ணாவிரதம்

ஊத்துக்கோட்டை:சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதி கேட்டு, இருளர் இன மக்கள், ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

பெரியபாளையம் அடுத்த, குமரப்பேட்டை கிராமத்தில் வசித்து வந்த இருளர்களுக்கு, ஊத்துக்கோட்டை வருவாய் துறை சார்பில், மாற்று இடம் ஒதுக்கப்பட்டது.கடந்த, 2017ம் ஆண்டு, பாலவாக்கம் ஊராட்சி, சிறுனை கிராமத்தில், 47 குடும்பத்தினருக்கு வீட்டு மனை ஒதுக்கப்பட்ட நிலையில், இதுவரை சாலை, மின்சாரம் ஆகிய வசதிகள் செய்து தரப்படவில்லை.மேலும், குடும்ப அட்டை, ஆதார் போன்றவை, குமரப்பேட்டை முகவரியில் உள்ளது. இவற்றை மாற்ற கோரி, மனு கொடுத்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என, கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த, 47 இருளர் குடும்பத்தினர், நேற்று, ஒரு நாள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.ஊத்துக்கோட்டை போலீசார், எல்லாபுரம் ஒன்றிய அதிகாரிகள், அவர்களிடம் பேச்சு நடத்தினர்.'சாலை, மின்சாரம் உள்ளிட்ட குறைகள் குறித்து, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்' என, அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து இருளர்கள், மாலையில் உண்ணாவிரதத்தை நிறைவு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X