சர்ச்சை பேச்சு: பிரக்யாவுக்கு எதிர்ப்பு

Updated : நவ 28, 2019 | Added : நவ 28, 2019 | கருத்துகள் (41)
Share
Advertisement
சர்ச்சை பேச்சு: பிரக்யாவுக்கு எதிர்ப்பு

புதுடில்லி : 'நாதுராம் கோட்சே தேசபக்தர்' என பா.ஜ.வைச் சேர்ந்த பெண் எம்.பி. பிரக்யா தாக்குர் பார்லியில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.எஸ்.பி.ஜி. எனப்படும் சிறப்பு பாதுகாப்புப் படை திருத்த மசோதா குறித்து லோக்சபாவில் நேற்று விவாதம் நடந்தது. அப்போது தி.மு.க.வைச் சேர்ந்த ராஜா மஹாத்மா காந்தியை கொன்றது ஏன் என நாதுராம் கோட்சே கூறியதை சுட்டிக் காட்டி பேசினார்.


latest tamil news


அப்போது குறிக்கிட்ட பா.ஜ. பெண் எம்.பி. பிரக்யா தாக்குர் "ஒரு தேசபக்தரை உதாரணமாக கூறக்கூடாது" என்றார்.இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் பிரக்யா தொடர்ந்து பேச முற்பட்டார். அவரை பா.ஜ.வினர் உட்காரும்படி சமாதானப்படுத்தினர்."ராஜா பேசியது மட்டுமே சபைக் குறிப்பில் இடம்பெறும்" என சபாநாயகர் ஓம் பிர்லா உத்தர விட்டார்.லோக்சபா தேர்தல் பிரசாரத்தின்போது நாதுராம் கோட்சேயை தேசபக்தர் என்று பிரக்யா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மீண்டும் அதே பிரச்னையை அவர் எழுப்பியுள்ளார்.

இந்தப் பிரச்னை குறித்து பா.ஜ.வைச் சேர்ந்த பார்லி விவகாரத் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறியதாவது:லோக்சபாவில் நடந்தது குறித்து பிரக்யாவிடம் விளக்கம் கேட்கப்பட்டது. தான் கோட்சே குறித்து ஏதும் பேசவில்லை என்று அவர் கூறினார். ஆங்கில ஜெனரல் டயரை சுட்டுக் கொன்ற உத்தவ் சிங் குறித்தே பேசியதாக அவர் குறிப்பிட்டார். மேலும் அவர் பேசிய போது 'மைக்' வேலை செய்யவில்லை; அதனால் அவருடைய பேச்சு குறிப்பில் இடம்பெறாது.இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement
வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-நவ-201913:08:34 IST Report Abuse
நாசர் முட்டு கொடுக்கிறது மன்னர்கள்
Rate this:
Share this comment
Cancel
28-நவ-201912:46:57 IST Report Abuse
Muralidharan S R BJP erred in taking action against Pragya. She had not justified the action of Godse in killing Mahatma. But whats wrong in calling Godse as a patriot of the nation? In fact, unlike the opportunists like DK, DMK who never participated in the freedom struggle, all RSS men are real patriots
Rate this:
Share this comment
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
28-நவ-201912:22:34 IST Report Abuse
skv srinivasankrishnaveni மஹாத்மா காந்தி தேசப்பிதா என்று சொல்லுறோம் ஓகே அவரை எதுக்கு கோட்ஸே கொலை செய்தார் என்று இன்றுவரை தெளிவாக எவனுமே பேசலே என்பதும் உண்மை இயற்கையாக மரணம் வந்தால் ஒரு விதம் வியாதியால் வரு மரணம் செய்த வினை என்றும் சடென்னா ஹார்ட் நின்னுபோனால் அனாயாசமரணம் என்றும் கோமாலே கிடந்தது செத்தால் ஒருவித நிம்மதியான மரணம் செத்தாளுக்கெல்லாம் ஒரு நியதி சொல்லும் மனிதன் கொலைகள் செய்யப்பட்டால் ஆர் தற்கொலை என்றால் இன்னவித மரணம் என்று சொல்றது இல்லீயே எப்படி செத்தாலும் போனா உயிர் திரும்பாவே வராது என்பதுதான் நிஜம் என்னைப்பொறுத்தவரை பலமுறை உண்ணா நோம்புஇருந்தவர் காந்திஜி பலநாட்கள் இருந்து அவரால் மக்கள் அட்டா துயரங்களை நான் என் சிறுவயசுலே பார்த்துருக்கேன் என் அம்மா வீட்டுலே மட்டும்தான் தினமணிபேப்பர் வாங்குவாங்க 1940LENTHU என் அம்மா இருந்தவரை தினமணி அண்ட் ஹிந்து பேப்பர்தான் அம்மா அந்தக்காலத்திலேயே லேடிவேலிங்க்டன் பல்லில் படிச்சவர் மிகவும் காந்திஜியின் மீதுபர்ரும் பாசமும் உண்டு அவர் சொல்லிண்டே இருப்பாரு காங்கிரஸ் கடிச்சி கலைக்கப்படணும் என்றுகாந்தி சொன்னதை சுயநலமே நெருதான் கட்சியை தன்குடும்ப சூத்தாக ஆக்கிட்டாரு அவர் செய்தாரோ இல்லியோ இந்த தி=இருட்டுகூட்டம்களேதான் சோனியாகு தாரைவார்த்தாங்க கோட்ஸே எதனால் சுட்டறு என்பதை க்ளியரா சொல்லுங்களேன்
Rate this:
Share this comment
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
28-நவ-201916:14:27 IST Report Abuse
skv srinivasankrishnaveniகுடும்ப சொத்தாக ஆயிட்டுதே இந்திர கான் கிரேஸ் இப்போது சோனியா ராகுல் கான் கிரேஸ்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X