சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கண்மாய் கரையில் குப்பையால் கால்நடைகளுக்கு ஆபத்து

Added : நவ 28, 2019
Advertisement

கூடலுார் : கூடலுார் ஒட்டான்குளம் கண்மாய் கரையில் கொட்டப்படும் குப்பையால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.கூடலுார் ஒட்டான்குளம் கண்மாயை நம்பி 500 ஏக்கர் பரப்பளவில் இரு போக நெல் சாகுபடி உள்ளது.

இதன் கரைப்பகுதி சமீபத்தில் சீரமைக்கப்பட்டது. ஆனால் தண்ணீர் தேங்கும் பகுதியில் கல் அடுக்கி முறையாக சீரமைக்காததால் கரைப்பகுதியில் தற்போது செடி கொடிகள் வளர்ந்துள்ளது. மேலும் கரைப்பகுதியை திறந்த வெளிக் கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர்.கடந்த சில நாட்களாக கோழி இறைச்சிக் கழிவுகள் அதிகமாக கரையோரத்தில் கொட்டப்பட்டது. இந்நிலையில் தற்போது குடியிருப்பில் சேகரமாகும் குப்பையும் இப்பகுதியிலேயே கொட்டப்படுகிறது.

இதனால் சுகாதாரக்கேடு அதிகமாக ஏற்பட்டுள்ளது. விளைநிலங்களுக்கு விவசாயிகள் இப்பாதை வழியாகத்தான் அதிகம் செல்கின்றனர். நுாற்றுக்கணக்கான தொழு மாடுகள் தண்ணீர் குடிக்க இங்கு வருகிறது. குப்பையில் கொட்டப்படும் பாலிதீன் பைகளால் கால்நடைகளுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X