காரியாபட்டி : உயர்கல்வி படிப்பவர்களுக்கே இலவச லேப்டாப் வழங்கப்பட்டதால் மற்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
அரசு பள்ளி, கல்லுாரி, தொழிற்கல்வி பயிலும் மாணவர்களை ஊக்கப்படுத்த அரசு இலவச லேப்டாப் வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு பயின்ற மாணவர்களுக்கு வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. அதற்கு பின் பிளஸ்1, பிளஸ் 2 முடித்தவர்களுக்கு லேப் டாப் வழங்கப்பட்டது. 2018 ம் ஆண்டு பிளஸ் 2 முடித்த மாணவர்கள் போராட்டங்களை நடத்தினர்.அதன்படி இவர்களுக்கு வழங்க பிளஸ்2 சான்றிதழுடன் போனோபைடு சான்றிதழ் கொண்டு வர புது நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
உயர் கல்வி படிக்கும் மாணவர்கள் போனோபைடு சான்றிதழ் காண்பித்து லேப்டாப் வாங்கினர்.உயர் கல்வி படிக்க முடியாத வசதியில்லாதவர்களுக்கு வழங்காததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.