பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

Added : நவ 28, 2019
Advertisement

சின்னமனுார் : திருச்சியில் நடைபெற்ற மாநில தடகள போட்டியில் வென்று, தேசிய போட்டிக்கு தேர்வாகியுள்ள சின்னமனுார் காயத்ரி மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது.

பள்ளி மாணவர்களுக்கான மாநில தடகள போட்டிகள் திருச்சி தொட்டியம் தனியார் கல்லுாரியில் நடந்தது.சின்னமனுார் காயத்ரி மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி வைஷ்ணவி, ஈட்டி எறிதலில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் பெற்றதால், பஞ்சாப்பில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ளார். இவர் வட்டு எறிதல் பிரிவில் மூன்றாமிடம் பெற்று வெண்கல பதக்கம் வென்றார். மாணவிகள் ரக்ஷனா, ஸ்ரீ ஜனனி மாநில போட்டியில் பங்கேற்றனர். இவர்களுக்கான பாராட்டு விழா, தாளாளர் விரியன்சுவாமி தலைமையில் நடந்தது. முதல்வர் சசிகலா தேவி, பள்ளி நிர்வாக அலுவலர் மனோஜ் கண்ணன் முன்னிலை வகித்தனர்.தாளாளர் பாராட்டி வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X