பொது செய்தி

தமிழ்நாடு

விருதுநகரில் ஹேங் மேன் உடற்தகுதி தேர்வு

Added : நவ 28, 2019
Advertisement

விருதுநகர் : விருதுநகரில் ஹேங் மேன் பணிக்கான உடற்தகுதி தேர்வு டிச.10 வரை நடக்கும் நிலையில் இது வரை 73 பேர் தேர்வாகி உள்ளனர்.

தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மான கழகத்தில் ஹேங்க்மேன் பதவிகளுக்காக விருதுநகர் மின் பகிர்மான வட்டத்தில் சான்றிதழ் சரிபார்த்தல், உடற்தகுதி தேர்வு நடந்து வருகிறது. நவ. 25 முதல் டிச. 10 வரை காலை 8:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரி எதிரில் உள்ள பெரிய வள்ளிக்குளம் துணை மின் நிலையத்தில் நடக்கிறது. நாள் ஒன்றுக்கு 200 பேர் வரை சான்றிதழ் சரிபார்த்து உடற்தகுதி தேர்வுக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

முதல் தேர்வில் இடுப்பு கயிறு அணிந்து முறையான பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி 30 அடி உயரம் உள்ள மின் கம்பத்தில் ஏறி, 'இரும்பு கிராஸ் ஆரத்தை' பொருத்திவிட்டு இறங்க வேண்டும். இதை 8 நிமிடங்களுக்குள் செய்ய வேண்டும். 2வது தேர்வில் மின் கடத்தியை உலோக பாகத்தில் முறையாக பொருத்திய பின்னர் மின்கடத்தியினை இணைத்து 20 சுற்றிற்கு குறையாமல் பைண்டிங் அடிக்க வேண்டும். 2 நிமிடத்தில் நிறைவு செய்ய வேண்டும். 31.5 கிலோ எடை உள்ள 3 இரும்பு 'வி.கிராஸ் ஆரங்களை' எடுத்து கொண்டு 100 மீட்டர் துாரத்தை ஒரு நிமிடத்தில் கடக்க வேண்டும் .

இத்தேர்வு மேற்பார்வை பொறியாளர் தேன்மொழி தலைமையில் நடந்து வருகிறது. இதுவரை 73 பேர் தேர்வாகி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X