தேவதானப்பட்டி : டி.வாடிப்பட்டி, எருமலைநாயக்கன்பட்டிக்கு செல்லும் 57 கிராம குடிநீர் திட்ட குழாய், சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி அருகில் உடைந்து நீர் வீணாகிறது.
பெரியகுளம் ஒன்றியம் எருமலைநாயக்கன்பட்டியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இவர்களின் தேவைக்காகஇரண்டு கிலோ மீட்டர் துாரம் உள்ள வேட்டுவன்குளம் கண்மாயில் 'போர்வெல்' அமைத்து குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. டி.வாடிப்பட்டியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். கிராமத்தின் வடக்கு பகுதியில் 'போர் வெல்' அமைத்து கிடைக்கின்ற நீர் சப்ளை செய்யப்படுகிறது.
இந்நிலையில் வைகை அணையில் நீர் எடுத்து செயல்படும் 57 கிராம குடிநீர் திட்டம் மூலம் சுத்திகரிப்பு செய்து, பாதுகாக்கப்பட்ட நீர் எருமலைநாயக்கன்பட்டி, டி.வாடிப்பட்டி கிராமங்களுக்கு தினமும் வழங்கப்படுகிறது. இதில் வழியில் சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளிஅருகில் குழாய் உடைந்து நீர் வீணாகிறது. இதனால் மேல்நிலைத் தொட்டிகளுக்கு நீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குழாயை சீரமைக்க குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE