சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நிறுத்தம்! சொட்டுநீர் பாசன ஊக்குவிப்பு மானியம்... தேனி மாவட்ட விவசாயிகள் பாதிப்பு

Added : நவ 28, 2019
Advertisement

தேனி : சொட்டுநீர் பாசன திட்டத்தை ஊக்குவிக்க வழங்கியஅரசுமானியம் நிறுத்தப்பட்டதால் தேனிமாவட்டவிவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறைந்த நீர் செலவில் அதிக மகசூல் பெற சொட்டுநீர், தெளிப்பு நீர், நுண்ணீர் பாசன திட்டங்கள் செயல்படுத்த விவசாயிகளுக்கு நுாறு சதவீத மானியம் அரசு வழங்குகிறது.மாவட்டம் வாரியாக இத் திட்டங்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. ஆனாலும் சொட்டுநீர் பாசன வசதி செய்யும் விவசாயிகள் குறிப்பிட்ட தொகை செலவு செய்ய வேண்டியுள்ளது.இதனால் பலர் திட்டத்தில் ஆர்வம் காட்டவில்லை. இவர்களை திட்டங்களுக்குள் கொண்டு வர வேளாண் துறையில்'சப்ளிமென்ட்ரி வாட்டர் மேனேஜ்மென்ட் ஆக்டிவிட்டி'எனும் நீர்வடிப்பகுதி முகமை மூலம்ஊக்குவிப்புமானியம் வழங்கப்பட்டது.

இதில் சொட்டு நீர் பாசன வசதி செய்த விவசாயிகளுக்கு ஆழ்துளை குழாய்க்கு ரூ.25 ஆயிரம், தரைமட்ட தொட்டிக்கு ரூ.40 ஆயிரம், மின் மோட்டார், ஆயில் மோட்டார் வாங்க ரூ.15 ஆயிரம், பைப் லைனுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் மானியம் வழங்கியது.இதில் பயன்பெற விவசாயிகள் மார்ச் முதல்'ஆன்லைனில்'விண்ணப்பித்தனர். கடந்த அக்டோபர் முதல் அரசு இத் திட்டத்தை நிறுத்தியது. மானியத்தை சொட்டுநீர் பாசன திட்டம் செயல்படுத்தும் தோட்டக்கலை, வேளாண் துறை மூலம் வழங்க உத்தரவிட்டது.

இதனால் ஏற்கனவே விண்ணப்பித்து மானியம் பெற காத்திருந்த விவசாயிகள் பெறஅதனைமுடியவில்லை. தேனி மாவட்டத்தில் 200 விவசாயிகள் மானியம் பெற முடியாமல் தவிக்கின்றனர்.தோட்டக்கலைத்துறையின் இணையதளத்தில் இதற்கான 'ஆப்சன்' இல்லாததால் விவசாயிகள் மானியம் பெறாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.இப்பிரச்னையால் மாநிலம் முழுவதும் பல ஆயிரம் விவசாயிகள் தவிக்கின்றனர். ஏற்கனவே பதிவு செய்தோர் பயன்பெற நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X