பொது செய்தி

தமிழ்நாடு

கம்பம் மருத்துவமனையில் ரத்ததான முகாம்

Added : நவ 28, 2019
Share
Advertisement
கம்பம் : கம்பம் அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற ரத்ததான முகாமில் ஏராளமானோர் ரத்த தானம் செய்தனர். 30 யூனிட் வரை ரத்தம் சேகரிக்கப்பட்டது.கம்பம் அரசு மருத்துவமனையில் மாவட்டத்தின் மூன்றாவது ரத்தவங்கி செயல்படுகிறது. புதிதாக துவக்கப்பட்ட இந்த ரத்தவங்கிக்கு ரத்தம் சேகரிக்க ஏற்கெனவே இரண்டு முகாம்கள் நடத்தப்பட்டன. எனினும் அதிக பிரசவங்கள், அறுவை சிகிச்சைகள்,

கம்பம் : கம்பம் அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற ரத்ததான முகாமில் ஏராளமானோர் ரத்த தானம் செய்தனர்.

30 யூனிட் வரை ரத்தம் சேகரிக்கப்பட்டது.கம்பம் அரசு மருத்துவமனையில் மாவட்டத்தின் மூன்றாவது ரத்தவங்கி செயல்படுகிறது. புதிதாக துவக்கப்பட்ட இந்த ரத்தவங்கிக்கு ரத்தம் சேகரிக்க ஏற்கெனவே இரண்டு முகாம்கள் நடத்தப்பட்டன. எனினும் அதிக பிரசவங்கள், அறுவை சிகிச்சைகள், அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு ரத்தம் தருவது போன்றவற்றால், ரத்தம் பற்றாக்குறை ஏற்பட்டது.

இதனால் ரத்ததான முகாமை மருத்துவமனை நிர்வாகம் நடததியது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் , பொதுமக்கள் என ஏராளமானோர் ரத்ததானம் செய்தனர். மொத்தம் 30 யூனிட் ரத்தம் வரை சேகரிக்கப்பட்டது.இந்த முகாமில் மருத்துவ குடிமை டாக்டர் அமுதினி, ரத்தவங்கி டாக்டர் பிரதீப், செவிலியர் கண்காணிப்பாளர் ஜோஸ்பின்ஜெனிபர் , செவிலியர் குழுவினர் ரத்தம் சேகரித்தனர். ஏற்பாடுகளை மருத்துவ அலுவலர் ஜெ.பொன்னரசன் செய்திருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X