பொது செய்தி

தமிழ்நாடு

தேனியில் சமுதாய வளைகாப்பு விழா

Added : நவ 28, 2019
Advertisement

தேனி : தேனியில் நடந்த சமுதாய வளைகாப்பில் துணை முதல்வர் பன்னீர் செல்வம் , 1,360 கர்ப்பிணிகளுக்கு பரிசு பை வழங்கினார்.

தேனி தனியார் மண்டபத்தில் மாவட்டத்தில் உள்ள 1,360 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை வகித்தார். கர்ப்பிணிகளுக்கு அறுசுவை உணவு வழங்க, மாலை, வளையல் அணிவித்து சேலையுடன் சீர்வரிசை பொருட்கள் வழங்கி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் பேசியதாவது:வலிமையான இந்தியா, வளமான தமிழகம் உருவாக வருங்கால தலைமுறைகளான குழந்தைகள் பிறக்கும் போது நல்ல ஆரோக்கியத்துடன் பிறக்கவேண்டும் என்ற நல்லநோக்கத்தில் இத் திட்டத்தை ஜெ. ஏற்படுத்தினார்.

இதற்காக குழந்தைகள் வளர்ச்சி திட்டம், இளம் குழந்தைகள் கவனிப்பு செய்திடவும், வளர் இளம் பெண்கள் முன்னேற்றத்திற்கு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது, என்றார்.விழாவில் ஜக்கையன் எம்.எல்.ஏ., டி.ஆர்.ஓ. கந்தசாமி, சப் -கலெக்டர் சினேகா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ெஹலன்ரோஸ் உள்பட பலர் கலந்து கொண் டனர். கர்ப்பிணிகள் அரசு பஸ்களில் மண்டபத்திற்கு இலவசமாக அழைத்து வந்து திரும்ப அந்தந்த ஊர்களிலேயே இறக்கிவிடப்பட்டனர். மண்டபம் நிரம்பியதால் எதிரே பந்தல் அமைத்து அமர வைக்கப்பட்டனர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X