பொது செய்தி

தமிழ்நாடு

நாளை நடக்கிறது

Added : நவ 28, 2019
Advertisement

ராஜபாளையம் : பொதுத்தேர்வு எழுத உள்ள பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டத்தை எதிர் கொள்ளும் வெற்றியின் ரகசியத்தை கற்றுத்தரும், தினமலர் நாளிதழின் 'சக்சஸ் மந்த்ரா' வழிகாட்டுதல் நிகழ்ச்சி, தேனி பாரஸ்ட் ரோட்டில் உள்ள அன்னப்பராஜா திருமண மண்டபத்தில் நாளை (நவ. 27) காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை நடக்கிறது.

மாணவர்கள் நலன் கருதி, 'ஜெயித்துக் காட்டுவோம்', 'வழிகாட்டி', 'உங்களால் முடியும்' உள்ளிட்ட கல்வி நிகழ்ச்சிகளை தினமலர் நாளிதழ் நடத்தி வருகிறது. இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் புதிய பாடத்திட்டத்தை எளிதாக எதிர்கொள்வது எப்படி என்பதை விரிவாக எடுத்துச் சொல்லும், “சக்சஸ் மந்த்ரா ஜெயித்துக்காட்டுவோம் 2.0” எனும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி ,அமிர்தா விஸ்வ வித்யாபீடம் நிறுவனத்துடன் இணைந்து தேனியில் நடத்துகிறது. புதிய பாடத்திட்ட தயாரிப்புக்குழு வல்லுநர்கள், அனுபவம் வாய்ந்த கல்வியாளர்களை கொண்டு புதிய பாடத்திட்டத்தை எவ்வாறு அணுகலாம்.

'க்யூ ஆர் கோடு' முக்கியத்துவம், பயன்படுத்தும் வழிமுறைகள், பொதுத்தேர்வு நடக்கும் விதம் குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன.அரிய வாய்ப்புநுழைவுத்தேர்வு, போட்டித் தேர்வுகளுக்கு தயாராவது, மனப்பாடம் செய்யாமலேயே புரிந்து கொள்வது, சுவாரஸ்யத்துடன் பாடங்களை படிப்பது எப்படி, தேர்வுக்கு முன் உடல் மற்றும் மனதை எப்படி தயார்படுத்துவது, கற்றதை தேர்வில் சிறப்பாக வெளிப்படுத்துதல் உள்ளிட்ட அனைத்து 'சக்சஸ் மந்த்ராக்'களையும் மாணவர்கள் தெரிந்து கொள்ள அரிய வாய்ப்பு ஏற்படும்.

அனுமதி இலவசம்மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளி ஆசிரியர்களும் தங்களது பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களை பங்கேற்க செய்து பயன் பெறலாம். நிகழ்வில் முக்கிய குறிப்புக்கள், வினாக்கள் அடங்கிய புத்தகம் இலவசமாக வழங்கப்படும். சாதனை படைக்க நினைப்போருக்கு இந்நிகழ்ச்சி வரப்பிரசாதம். அதனால் ' மிஸ் பண்ணாமல் 'பங்கேற்று, பயன்பெறுங்கள் மாணவர்களே. பெற்றோர்களுக்கும் அனுமதி உண்டு.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X