பொது செய்தி

தமிழ்நாடு

'சிலம்பு'வை தினமும் இயக்க ஆலோசனை

Added : நவ 28, 2019
Share
Advertisement
விருதுநகர் : ''சிலம்பு எக்ஸ்பிரஸ்சை விருதுநகர் வழியாக தினமும் இயக்குவது குறித்து ஆலோசிக்கப்படும்,'' என தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஜான் தாமஸ் கூறினார். செங்கோட்டை , ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷன்களில் ஆய்வு மேற்கொண்ட அவர் விருதுநகர் ரயில்வே ஸ்டேஷன் வந்தார். முதுநிலை கோட்ட வர்த்தக மேலாளர் பிரசன்னா, அருப்புக்கோட்டை எம்.எல்.ஏ., சாத்துார் ராமச்சந்திரன்

விருதுநகர் : ''சிலம்பு எக்ஸ்பிரஸ்சை விருதுநகர் வழியாக தினமும் இயக்குவது குறித்து ஆலோசிக்கப்படும்,'' என தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஜான் தாமஸ் கூறினார்.

செங்கோட்டை , ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷன்களில் ஆய்வு மேற்கொண்ட அவர் விருதுநகர் ரயில்வே ஸ்டேஷன் வந்தார். முதுநிலை கோட்ட வர்த்தக மேலாளர் பிரசன்னா, அருப்புக்கோட்டை எம்.எல்.ஏ., சாத்துார் ராமச்சந்திரன் வரவேற்றார். விருதுநகர் வியாபார தொழில்துறை சங்கம், அருப்புக்கோட்டை ரயில் பயணிப்போர் சங்கம், விருதுநகர் ரயில் உபயோகிப்பாளர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் மனு அளித்தனர். ரயில்வே மின்பாதை பராமரிப்பு அலுவலக கட்டுமான பணியை ஆய்வு செய்து ரயில்வே ஸ்டேஷனில் சிற்றுண்டி உணவகங்களை திறந்து வைத்தார்.

பொதுமேலாளர் கூறியதாவது: மதுரை கோட்டத்தின் பராமரிப்பு பணிகள் நன்றாக உள்ளது. பயணிகளுக்கான வசதிகளும் நல்ல முறையில் உள்ளது. அனைத்து ஸ்டேஷன்களும் சுத்தமாக உள்ளன. பல்வேறு பயணிகள் சங்கத்தில் இருந்து கோரிக்கை வந்துள்ளது. கூடுதல் ரயில்கள் இயக்குவது பரிந்துரைக்கப்பட்டு நல்ல முடிவு எட்டப்படும். சிலம்பு எக்ஸ்பிரஸ்சை தினமும் இயக்குவது குறித்து ஆலோசிக்கப்படும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X