அரசியல் செய்தி

தமிழ்நாடு

பகலில் 'அந்தியோதயா' எம்.எல்.ஏ., வேண்டுகோள்

Added : நவ 28, 2019
Advertisement

விருதுநகர் : செங்கோட்டை -தாம்பரம் அந்தியோதயா ரயிலை பகல் நேரத்தில் இயக்க விருதுநகர் வந்த ரயில்வே பொதுமேலாளர் ஜான் தாமசிடம் தி.மு.க., எம்.எல்.ஏ., சாத்துார் ராமசந்திரன் மனு வழங்கினார்.

விருதுநகர் ரயில்வே ஸ்டேஷனில் ஆய்வு மேற்கொண்ட பொதுமேலாளரிடம் சாத்துார் ராமச்சந்திரன் அளித்த மனுவில், '' சிலம்பு எக்ஸ்பிரஸ் தினமும் இயக்கப்பட்டால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதுபோல் செங்கோட்டை -தாம்பரம் அந்தியோதயா ரயிலை பகல் நேரத்தில்இயக்க வேண்டும்,''என குறிப்பிட்டுஇருந்தார்.விருதுநகர் வியாபார தொழில் துறை சங்க தலைவர் யோகன் மனுவில், ''தென்காசி, ராஜபாளையம், விருதுநகர் வழியாக கோயம்புத்துாருக்கு பகல் நேரத்தில் எக்ஸ்பிரஸ் இயக்க ,''கேட்டுகொண்டார்.

அருப்புக்கோட்டை ரயில் பயணிப்போர் சங்கத்தினர் அளித்த மனுவில், 'சிலம்பு ரயில் அருப்புக்கோட்டை மக்களுக்கு அத்தியாவசியமான ஒன்று. அதை தினமும் இயக்கினால் நிர்வாகத்திற்கு நல்ல வருவாய் கிடைக்கும். மதுரை- துாத்துக்குடி அகலப்பாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மேலும் மாவட்டத்திற்கு கூடுதல் ரயில் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்,' என , கேட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X