பொது செய்தி

இந்தியா

இருமுடி கட்டில் பிளாஸ்டிக் தவிர்க்கவும்: சபரிமலை தந்திரி வேண்டுகோள்

Updated : நவ 28, 2019 | Added : நவ 28, 2019 | கருத்துகள் (8)
Advertisement

சபரிமலை: 'பக்தர்கள், தங்கள் இருமுடி கட்டில், பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும்,'' என, தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.






அவர் கூறியதாவது:பம்பையில் குளித்த பின், பக்தர்கள் ஆடைகளை ஆற்றில் வீசுவதில், எந்த ஐதீகமும் இல்லை. சபரிமலை ஆசாராங்களில், இது கிடையவே கிடையாது.சிலர் செய்த தவறை பின்பற்றி, ஏராளமானோர் அந்த தவறை செய்து வருகின்றனர். இதை, பக்தர்கள் தவிர்க்க வேண்டும்.





புண்ணிய நிதி பம்பையை, துாய்மையாக பராமரிக்க வேண்டும். அதுபோல, பக்தர்கள், தங்கள் இருமுடி கட்டில் பிளாஸ்டிக் எடுத்து வருவதை தவிர்க்க வேண்டும்.பக்தர்கள் வீசி எறியும் பன்னீர் குப்பிகள், பிளாஸ்டிக் கவர்கள், சபரிமலையில் பெரிய சுற்றுச்சூழல் பிரச்னையை ஏற்படுத்துகிறது.பிளாஸ்டிக் இல்லாத சபரிமலையை உருவாக்க, பக்தர்கள் ஒத்துழைக்க வேண்டும். கடவுள் சிந்தனையை வளர்க்கவும், வாழ்க்கை முழுவதும், நம்பிக்கையின் புனிதத்தை பாதுகாக்கவும், அய்யப்ப தரிசனம் அனைத்து பக்தர்களுக்கும் வழிவகுக்கும். இவ்வாறு, அவர்கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
28-நவ-201912:13:02 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் சக உயிரை, தன்னையே சுமந்த பெண் இனத்தை மதிக்கத் தெரியாத மதமூர்க்கர்களா இதை செய்யப் போறாங்க? தெய்வீகம் இந்த இடத்தை விட்டு என்றோ ஓடிவிட்டது. பக்தர்கள் என்று மனிதப்பதர்களாக முரட்டு பக்தி என்று மதம் பிடித்து அலையும் கூட்டம். அழித்த இடங்கள் எத்தனையோ. அதில் இதுவும் ஒன்றாக காடு, வனம்இயற்கை அழிந்து பொட்டலாக நிற்கும்.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
28-நவ-201912:04:06 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் குளித்த பின், பக்தர்கள் ஆடைகளை ஆற்றில் வீசுவதில், எந்த ஐதீகமும் இல்லை.
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
29-நவ-201901:53:31 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்அது வடக்கத்தி மூர்க்கர்களின் பண்பாடு....
Rate this:
Share this comment
Cancel
oce - kadappa,இந்தியா
28-நவ-201911:05:14 IST Report Abuse
oce தமிழக அய்ய்ப்ப் பக்தாஸ்கள் இனி இரு முடியை பட்டு துண்டில் கட்டி எடுத்த போக வேண்டும். தந்திரிகளுக்கு மேல் துண்டுக்கு பட்டு துண்டு உதவும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X