பொது செய்தி

தமிழ்நாடு

'5, 8க்கு பொதுத்தேர்வு; 'பெயில்' கிடையாது!'

Updated : நவ 28, 2019 | Added : நவ 28, 2019 | கருத்துகள் (7)
Advertisement

சென்னை: ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பாக பள்ளி கல்வி அமைச்சரும் செயலரும் புதிய விளக்கம் அளித்துள்ளனர்.






பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் முதன்மை செயலர் பிரதீப் யாதவ் ஆகியோர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:மத்திய அரசின் உத்தரவுப்படி ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொது தேர்வுகட்டாயம் நடத்தப்படும்.

ஆனால் மூன்று ஆண்டுகளுக்கு எந்த மாணவரின் தேர்ச்சியும் நிறுத்தி வைக்கப்படாது. அதாவது தேர்வு எழுதும் அனைவரும் அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி செய்யப்படுவர். பொதுத் தேர்வை பொருத்தவரை ஐந்தாம் வகுப்புக்கு தமிழ் ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகிய மூன்று பாடங்களுக்கு மட்டும் நடத்தப்படும். மற்ற பாடங்களுக்கு பொதுத் தேர்வு கிடையாது; சாதாரண தேர்வு நடத்தப்படும்.




எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய ஐந்து பாடங்களுக்கும் பொது தேர்வு நடத்தப்படும். தேர்வு மையங்கள் மாணவர்கள் படிக்கும் பள்ளிகளிலேயே ஏற்படுத்தப்படும். வேறு பள்ளிக்கு செல்ல தேவையில்லை. ஐந்து மாணவர்களுக்கு குறைவான பள்ளிகளில் படிப்போர் மட்டும் வேறு பள்ளிகளுக்கு தேர்வு எழுத செல்லவேண்டியிருக்கும்.

இந்த தேர்வை பார்த்து பெற்றோரும் மாணவர்களும் பீதியடைய வேண்டாம். வினாத்தாள் எளிதாக இருக்கும். அந்தந்த பள்ளிகளிலேயே வினாத்தாள் வழங்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkat -  ( Posted via: Dinamalar Android App )
28-நவ-201909:04:02 IST Report Abuse
Venkat இதுக்கு பருத்தி மூட்டை கொடவுன்லயே இருக்கலாமே...
Rate this:
Share this comment
பஞ்ச்மணி - கோவை,இந்தியா
28-நவ-201912:03:46 IST Report Abuse
பஞ்ச்மணிஇதுக்கு தான் டுமிலன்ஸ் வேணுமுன்னு சொல்லறது முதல் முறை 10 பரீட்சை எழுதற பையோனோட டென்ஷன் என்னவா இருக்குமுன்னு தெரியாது அவனுக்கு இருக்கற peer pressure என்னனு தெரியாது ஆனா கருத்து மட்டும் தவறாம வந்துடும் என்ன நாங்க எல்லாம் டுமிலன்ஸ் 🤣😂 அதுக்கு இந்தமாதிரி பொது தேர்வை ஒரு முன்னோடியா வெச்சிருந்தா அவன் பொது தேர்வின் பயம் பாதியாவது குறையும் this will a positive phycological impact....
Rate this:
Share this comment
Cancel
Venkat -  ( Posted via: Dinamalar Android App )
28-நவ-201909:04:02 IST Report Abuse
Venkat இதுக்கு பருத்தி மூட்டை கொடவுன்லயே இருக்கலாமே...
Rate this:
Share this comment
R Ravikumar - chennai ,இந்தியா
28-நவ-201912:53:39 IST Report Abuse
R Ravikumarஒரு வரியில் முடிச்சிட்டீங்களே ......
Rate this:
Share this comment
Cancel
GMM - KA,இந்தியா
28-நவ-201908:44:00 IST Report Abuse
GMM மாணவருக்கு பள்ளி தேர்வு என்பது வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பது. தேர்வு எழுதினால் அனைவரும் பாஸ். (PAK - பெரியார், அண்ணா, கலைஞர் ) சமூக நீதியை மத்திய பொது தேர்வு வெல்ல முடியாது. கேள்வியுடன் பதிலும் தயாரித்து கொடுத்து, ஆசிரியர் உதவி செய்ய அனைவரும் தேர்ச்சி அடைய அரசு உதவலாம்.ஓட்டு வாங்க என்ன பாடு பட வேண்டி இருக்கு. (வங்கி messenger பணிக்கு SSLC தேர்ச்சி பெற்று இருக்க கூடாது.)
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X