வங்கதேச தாக்குதல்: 7 பேருக்கு தூக்கு

Added : நவ 28, 2019 | கருத்துகள் (3)
Advertisement
வங்கதேசம், தாக்குதல்,சம்பவம், 7 பேர், தூக்கு

தாகா: வங்கதேச ஓட்டலில், 2016ல் நடந்த பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய ஏழு பேருக்கு, துாக்கு தண்டனை விதித்து, அந்நாட்டு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

அண்டை நாடான வங்கதேச தலைநகர் தாகாவின் முக்கிய பகுதியான குல்ஷன் என்ற இடத்தில், ஹோலி ஆர்டிசன் பேக்கரி என்ற உணவகம் உள்ளது.

இங்கு, ஜூலை 1, 2016ல், பயங்கரவாத தாக்குதல் நடந்தது. இதில், ஐரோப்பிய நாடான இத்தாலியை சேர்ந்த ஒன்பது பேர், கிழக்காசிய நாடான ஜப்பானை சேர்ந்த ஏழுபேர் மற்றும் இந்தியாவை சேர்ந்த பெண் உட்பட, மொத்தம் 17 சுற்றுலா பயணியர் கொல்லப்பட்டனர்.இந்த தாக்குதலுக்கு, நியோ ஜமாத் - உல் - முஜாகிதீன் வங்கதேசம் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. ஐ.எஸ்., அமைப்பின் உதவியுடன், இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த தாக்குதலில் ஈடுபட்ட ஐந்து பயங்கரவாதிகளை, போலீசார் சுட்டுக் கொன்றனர். இந்த தாக்குதலுக்கு நிதி உதவி, ஆயுதங்கள் அளித்தது உட்பட, பல்வேறு உதவிகளை செய்த, எட்டு பேரை, போலீசார் கைது செய்தனர். வங்கதேச பயங்கரவாத ஒழிப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

குற்றவாளிகள் எட்டு பேரில், ஒருவர் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லாததால், அவர் விடுவிக்கப்பட்டார். மீதியுள்ள ஏழு பேருக்கு, துாக்கு தண்டனை விதித்து, நீதிபதி தீர்ப்பளித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ரத்தினம் - Muscat,ஓமன்
28-நவ-201908:29:28 IST Report Abuse
ரத்தினம் நாங்க எல்லாம் சிக்கன் பிரியாணி போட்டு கௌரவிப்போம். ஏன்னா நாங்க மத சார்பற்ற நாடு.
Rate this:
Share this comment
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
28-நவ-201905:06:16 IST Report Abuse
Pannadai Pandian Unlike India, Bangladesh courts don't be afraid of muslims…..good sign....
Rate this:
Share this comment
Cancel
uthappa - san jose,யூ.எஸ்.ஏ
28-நவ-201904:53:47 IST Report Abuse
uthappa மத சார்பற்ற நாட்டில்தான் ஒன்றும் முடியாது. அங்கே ஓட்டுக்காக பிச்சை எடுக்க வேண்டிய அவசியம் இல்லையே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X