பொது செய்தி

தமிழ்நாடு

வடகிழக்கு பருவ மழை மீண்டும் தீவிரம்: இன்று முதல் ஒரு வாரத்துக்கு கொட்டும்

Updated : நவ 28, 2019 | Added : நவ 28, 2019 | கருத்துகள் (4)
Advertisement

சென்னை: வடகிழக்கு பருவ மழை மீண்டும் தீவிரம் காட்ட துவங்கியுள்ளது. இன்று முதல் ஒரு வாரத்துக்கு தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை இரண்டு வாரங்களுக்கு மேலாக வலுவிழந்து காணப்பட்டது. அரபி கடலில் இரண்டு புயல்களும் வங்க கடலில் ஒரு புயலும் உருவானதால் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய மழை மற்ற மாநிலங்களுக்கு சென்றது. அதனால் வட மாவட்டங்களுக்கு இந்த ஆண்டு வழக்கமாக கிடைக்க வேண்டிய மழை பெய்யுமா என பொது மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் வட கிழக்கு பருவ மழை மீண்டும் தீவிரம் காட்ட துவங்கியுள்ளது. கடலோர மாவட்டங்களில் மிதமான மழை துவங்கியுள்ளது. டிச. 1 வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.





தனியார் வானிலை ஆய்வுகள் மற்றும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் செயற்கைகோள் படங்களின் படி இன்னும் ஒரு வாரத்துக்கு தமிழக கடலோர மாவட்டங்களில் மிதமானது முதல் கன மழை பெய்வதற்கு சாதகமான சூழல்கள் உருவாகியுள்ளன. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், புதுச்சேரி, கடலுார், நாகை, ராமநாதபுரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களிலும் பிற உள்மாவட்டங்களிலும் மழைக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் நவ. 30ம் தேதி முதல் இரண்டு நாட்களுக்கு மழை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vivekanandan Mahalingam - chennai,இந்தியா
28-நவ-201915:10:43 IST Report Abuse
Vivekanandan Mahalingam வானிலை முன்னறிவிப்பு மிகவும் கேவலமான நிலையில் உள்ளது . இந்தியாவில் உலகத்தரம் வாய்ந்த எல்லா கருவிகளும் இருந்தும் இந்த கேவலம் . காரணம் படிப்பு மற்றும் தகுதி அடிப்படையில் பதவி கொடுக்கப்படவில்லை .
Rate this:
Share this comment
Cancel
sudhanthiran. - chennai,இந்தியா
28-நவ-201910:38:45 IST Report Abuse
sudhanthiran. வடகிழக்கு பருவ மழை மீண்டும் தீவிரம்: இன்று முதல் ஒரு வாரத்துக்கு கொட்டும். "கொட்டும்" செய்தியாளருக்கு மழையென்றால் ஏன் இவ்வளவு வெறுப்போ?
Rate this:
Share this comment
Cancel
28-நவ-201909:59:32 IST Report Abuse
நக்கல் சொல்லாம இருந்தா பெய்யுற மழையும் சொன்னா பெய்ய மாட்டேங்குது.... இன்னிக்கு சொல்லிட்டாங்க, மாடில கோதுமை காய போடலாம்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X