வடகிழக்கு பருவ மழை மீண்டும் தீவிரம்: இன்று முதல் ஒரு வாரத்துக்கு கொட்டும்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வடகிழக்கு பருவ மழை மீண்டும் தீவிரம்: இன்று முதல் ஒரு வாரத்துக்கு கொட்டும்

Updated : நவ 28, 2019 | Added : நவ 28, 2019 | கருத்துகள் (4)

சென்னை: வடகிழக்கு பருவ மழை மீண்டும் தீவிரம் காட்ட துவங்கியுள்ளது. இன்று முதல் ஒரு வாரத்துக்கு தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை இரண்டு வாரங்களுக்கு மேலாக வலுவிழந்து காணப்பட்டது. அரபி கடலில் இரண்டு புயல்களும் வங்க கடலில் ஒரு புயலும் உருவானதால் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய மழை மற்ற மாநிலங்களுக்கு சென்றது. அதனால் வட மாவட்டங்களுக்கு இந்த ஆண்டு வழக்கமாக கிடைக்க வேண்டிய மழை பெய்யுமா என பொது மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் வட கிழக்கு பருவ மழை மீண்டும் தீவிரம் காட்ட துவங்கியுள்ளது. கடலோர மாவட்டங்களில் மிதமான மழை துவங்கியுள்ளது. டிச. 1 வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.





தனியார் வானிலை ஆய்வுகள் மற்றும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் செயற்கைகோள் படங்களின் படி இன்னும் ஒரு வாரத்துக்கு தமிழக கடலோர மாவட்டங்களில் மிதமானது முதல் கன மழை பெய்வதற்கு சாதகமான சூழல்கள் உருவாகியுள்ளன. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், புதுச்சேரி, கடலுார், நாகை, ராமநாதபுரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களிலும் பிற உள்மாவட்டங்களிலும் மழைக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் நவ. 30ம் தேதி முதல் இரண்டு நாட்களுக்கு மழை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X