இந்தியா

காரைக்காலில் மூலிகை கண்காட்சி

Added : நவ 28, 2019
Advertisement

காரைக்கால்: காரைக்காலில் இயற்கை மருத்துவ மூலிகை கண்காட்சியை அமைச்சர் கமலக்கண்ணன் திறந்து வைத்தார்.காரைக்காலில் நலவழித்துறை சார்பில் இந்திய முறை மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குனரகம் யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவு சார்பில் 2வது தேசிய இயற்கை மருத்துவ தினம் மற்றும் மாபெரும் யோகா இயற்கை மருத்துவ முகாம் பாரதியார் சாலையில் உள்ள நகராட்சி திருமண மண்டபம் அருகில் உள்ள மருத்துவமனையில் நடந்தது.முகாம் துவக்க விழாவிற்கு துணை கலெக்டர் ஆதாஷ் முன்னிலை வகித்தார். நலவழித்துறை துணை இயக்குனர் மோகன்ராஜ் வரவேற்றார். வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன் குத்து விளக்கு ஏற்றி முகாமை துவக்கி வைத்து, மூலிகை கண்காட்சியை பார்வையிட்டார்.கண்காட்சியில் மருத்துவம், யோகா பயிற்சி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், இயற்கை உணவுகள், அதன் பயன்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X