இந்தியா

அண்ணா சாலையில் ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு, வியாபாரிகள் மறியலால், பணிகள் நிறுத்தம்

Added : நவ 28, 2019
Advertisement
 அண்ணா சாலையில் ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு,  வியாபாரிகள் மறியலால், பணிகள் நிறுத்தம்

புதுச்சேரி: புதுச்சேரி அண்ணா சாலையில் ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.புதுச்சேரி பிரதான சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, கலெக்டர் அருண் தலைமையில் நடந்த சாலை பாதுகாப்பு கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் இடம் மற்றும் தேதி அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்பாக, ஆக்கிரமிப்பாளர்கள் தாமாக முன்வந்து அகற்றிக் கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில், ஆக்கிரமிப்புகள் அகற்றுவதுடன், அபராதம் மற்றும் நகராட்சி தொழில் உரிமம் ரத்து போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என, எச்சரிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து நகராட்சி, வருவாய், பொதுப்பணித்துறை, மின்துறை, போலீசார் குழுவாக மூன்று கட்டமாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், ஒரு சில பகுதிகளில் அரசியல் செல்வாக்கு காரணமாக ஆக்கிரமிப்பு அகற்றுவதில் இடையூறு ஏற்பட்டு வருகிறது.அந்த வகையில் நேற்று அண்ணா சாலையில் பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் ஏழுமலை, இளநிலைப் பொறியாளர் தேவதாஸ், நகராட்சி பொறியாளர்கள் மலைவாசன், பழனிராஜா, ஞானசேகரன் உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி துவங்கியது.குபேர் பஜார் பகுதியில் ஆக்கிரமிப்புகள் பொக்லைன் இயந்திரம் மூலம் இடிக்கப்பட்டது. அப்போது ஒன்று திரண்ட அப்பகுதி வியாபாரிகள், ஆக்கிரமிப்புகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அப்போது அதிகாரிகள் குறிப்பிட்ட நாள் அவகாசம் கொடுக்கப்பட்டும் ஏன் அகற்றவில்லை என கேட்டனர்.ஆனால் வியாபாரிகள் மேலும் ஒரு வார கால அவகாசம் தங்களுக்கு வழங்க வேண்டும் என கூறினர். இருதரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தினால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.இதனையடுத்து வியாபாரிகள் அண்ணா சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது, வியாபாரிகள் காவல்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் உருவானது.இந்நிலையில்அந்த தொகுதி எம்.எல்.ஏ., சிவா, அதிகாரிகள் மற்றும் வியாபாரிகளிடம் பேசியதை தொடர்ந்து போராட்டத்தை வியாபாரிகள் கைவிட்டனர். தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெறாமல் நிறுத்தப்பட்டது.இதேபோன்று, முதலியார்பேட்டை மற்றும் நுாறடி சாலை, தட்டாஞ்சாவடி சாலை உள்ளிட்ட பகுதிகளில் வியாபாரிகள் எதிர்ப்பு காரணமாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணி ஏற்கனவே பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X