இந்தியா

போராட்டம் நடத்துவோம்: சிவா திடீர் எச்சரிக்கை

Added : நவ 28, 2019
Advertisement

புதுச்சேரி: 'காங்., ஆட்சிக்குத்தான் தி.மு.க., ஆதரவு; ஆட்சியாளர்களின் தவறான செயல்பாடுகளுக்கு தி.மு.க., ஒருபோதும் ஆதரவளிக்காது' என, தெற்கு மாநில தி.மு.க., அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., கூறினார்.கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுப்பணித் துறை வவுச்சர் ஊழியர்கள் நேற்று மூன்றாவது நாளாக போராட்டம் நடத்தினர். சுதேசி மில் அருகில் நடந்த போராட்டத்திற்கு, தெற்கு மாநில தி.மு.க., அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., தலைமையில் துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி, குணா திலீபன், வழக்கறிஞர் செந்தில்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.பின், சிவா எம்.எல்.ஏ., பேசியதாவது:ஆட்களை வேலைக்கு வைத்த அரசே அவர்களை பற்றி கவலைப்படாமல் உள்ளது. இந்த விசித்திரமெல்லாம் புதுச்சேரியில்தான் நடக்கும். இந்த தொழிலாளர்கள் தொடர்ந்து பணியாற்றுகின்ற வகையில் இந்த அரசும், ஆட்சியாளர்களும் முயற்சி மேற்கொள்ளவில்லை.இந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு, பட்ஜெட் தாக்கல் செய்தபோது நிதி ஒதுக்கி இருக்க வேண்டும். ஆனால், அரசுக்கு எண்ணமில்லை. மத்திய அரசு அமல்படுத்தியுள்ள குறைந்தபட்ச கூலி நிர்ணயச் சட்டத்தையும் அமல்படுத்தவில்லை.அந்த துறையின் அமைச்சரோ, அரசு சார்பு நிறுவனங்கள் பலவற்றுக்கு மூடுவிழா கண்டவராக இருக்கிறார். ஸ்பின்கோ, கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை மூடிய பெருமை அவரையே சேரும். இது, புதுச்சேரி மக்களின் சாபக்கேடு. ஒரு தனி மனிதனின் கஷ்டத்தை உணருகின்றவர்கள் அரசில் இருக்க வேண்டும். அப்படி இருந்திருந்தால் தங்களுக்காக உழைத்தவர்களை இப்படி அல்லல்பட வைப்பார்களா.ஆட்சிக்குத்தான் தி.மு.க., ஆதரவு. ஆட்சியாளர்கள் செய்யும் அக்கிரமத்திற்கு, தவறான செயல்பாடுகளுக்கு தி.மு.க., ஒருபோதும் ஆதரவளிக்காது. இந்த தொழிலாளர்களின் குடும்பங்கள் படுகின்ற கஷ்டங்களையெல்லாம் அறிந்துதான் இவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுகிறோம்.இந்த தொழிலாளர்களுடன் நாங்கள் வருகிறோம். சட்டசபையை சுற்றியோ அல்லது தலைமைச் செயலகத்தை முடக்குகின்ற வகையில் போராட்டம் நடத்துவோம். ஆட்சியாளர்கள் அடக்குமுறையை கையாண்டாலும், சிறை சென்றாவது நம் கோரிக்கையை வென்றெடுப்போம். அதற்கு தி.மு.க., துணை நிற்கும்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X