இந்தியா

அரசு நிறுவனங்களை மீட்டெடுக்கும் முயற்சிகள் துவக்கம்!...'பாப்ஸ்கோ'வை தூக்கி நிறுத்த நடவடிக்கை

Added : நவ 28, 2019
Advertisement

புதுச்சேரியில் உள்ள பெரும்பாலான அரசு சார்பு நிறுவனங்கள் நஷ்டத்தில் தத்தளித்துக் கொண்டுள்ளன. இதனால், அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு மாதக்கணக்கில் சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதிக எண்ணிக்கையிலான ஆட்களை வேலைக்கு வைத்தது, கடந்த காலத்தில் வாய்ப்புகள் இருந்தும் அரசுக்கு லாபம் ஈட்டி தராதது உள்ளிட்ட காரணங்களால் அரசு சார்பு நிறுவனங்கள் பலவற்றின் நிலைமை கேள்விக் குறியாகி உள்ளது.அரசு சார்பு நிறுவனங்களை துாக்கி நிறுத்துவதற்கான வாய்ப்புகளை ஆராய்வதற்காக ஒரு நபர் கமிட்டியை அரசு அமைத்தது. தீவிரமான ஆய்வு மேற்கொண்ட கமிட்டி, பல்வேறு பரிந்துரைகளை அரசுக்கு அறிக்கையாக அளித்துள்ளது.இதையடுத்து, அரசு சார்பு நிறுவனங்களை மீட்டெடுக்கவும், அங்கு பணியாற்றும் ஊழியர்களின் நலனை பாதுகாக்கவும் தேவையான முயற்சிகளை அரசு துவக்கி உள்ளது. முதல்கட்டமாக, நஷ்டத்தில் தள்ளாடிக் கொண்டிருக்கும் அரசு சார்பு நிறுவனங்களில் ஒன்றான பாப்ஸ்கோ நிறுவனத்துக்கு புத்துயிர் அளிப்பது தொடர்பான கூட்டம், கடந்த 20ம் தேதி நடந்தது.சட்டசபையில் உள்ள கமிட்டி அறையில் முதல்வர் நாராயணசாமி, குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் கந்தசாமி ஆகியோர் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தலைமைச் செயலர், செயலர்கள் மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறையின் இயக்குனர் வல்லவன், கலால் துணை கலெக்டர் தயாளன், பாப்ஸ்கோ மேலாண் இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், பாப்ஸ்கோ நிறுவனத்தின் நிதி நிலைமை தொடர்பாக அதிகாரிகள் விளக்கி கூறினர்.

பாப்ஸ்கோ நிறுவனம் 2 மொத்த மதுபான விற்பனை கடைகள், 33 சில்லறை மதுபான விற்பனை கடைகளை நடத்தி வருகிறது. இதில், 25 கடைகளை வெளிப்படையாக ஏலம் விட்டு வருவாய் திரட்டுவது என, முடிவு செய்யப்பட்டது. கூடுதல் வருவாயை ஈட்டும் வகையில் புதுச்சேரி மட்டுமல்லாமல், வெளிமாநிலத்தவரும் பங்கேற்கும் வகையில் மின்னணு ஏலம் (இ - ஆக் ஷன்) நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.மீதியுள்ள 10 மதுபானக் கடைகளை நல்ல முறையில் நடத்தி வருவாய் ஈட்டுவதற்கு பாப்ஸ்கோ தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், தேவைக்கு அதிகமாக உள்ள ஊழியர்கள் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X