இந்தியா

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

Added : நவ 28, 2019
Advertisement

புதுச்சேரி: பள்ளி மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய வாலிபருக்கு,10 ஆண்டு சிறை தண்டனை விதித்து, புதுச்சேரி கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.புதுச்சேரி அடுத்த கொம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம் 25; இவர் கடந்த 2014ம் ஆண்டு 15 வயது, பள்ளி மாணவியை காதலித்து, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கினார்.இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரின், முதலியார்பேட்டை போலீசார், பரமசிவத்தை கைது செய்து, அவர் மீது புதுச்சேரி சிறப்பு கோர்ட்டில் போக்சோ மற்றும் பாலியல் பலாத்காரம் பிரிவுகளில் வழக்கு தொடர்ந்தனர்.வழக்கை விசாரித்த நீதிபதி தனபால், சிறுமியை கர்ப்பமாக்கிய பரமசிவத்திற்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 4,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் பாலமுருகன் ஆஜராகினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X