பாகூர்: வீட்டின் எதிரே நிறுத்தி வைத்திருந்த பைக்கை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.கிருமாம்பாக்கம், ஐஸ்வர்யா கார்டனை சேர்ந்தவர் நடராஜன்,32; ஏ.சி., மெக்கானிக். இவர் கடந்த 20ம் தேதி பி.ஓய் 01 சி.எல். 0895 என்ற பதிவெண் கொண்ட தனது பஜாஜ் பல்சர் பைக்கை, வீட்டின் எதிரே நிறுத்தி விட்டு,வெளியே சென்று விட்டார். பின்னர், திரும்பி வந்து பார்த்த போது, பைக்கை காணவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபரை தேடிவருகின்றனர்.