ஏரிச்சாலையில் உலாவரும் கால்நடைகளால் பாதிப்பு

Added : நவ 28, 2019
Advertisement

கொடைக்கானல் : கொடைக்கானல் ஏரிச்சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் சுற்றுலா பயணிகள் அவதிப்படுகின்றனர்.

சுற்றுலா தலமான கொடைக்கானலில் பயணிகள் அதிக விரும்பும்வது ஏரிப் பகுதியைத்தான். இதில் படகு சவாரி தவிர்த்து சுற்றுச்சாலையில் குதிரை, சைக்கிள் சவாரி செய்து மகிழ்வர். காலை, மாலையில் நடைபயணம் என இயற்கை விரும்பிகளை ஈர்க்கிறது.இப்பகுதியில் தீராத தலைவலியாக இருப்பது இஷ்டம் போல் சுற்றித்திரியும் மாடுகள் தான். ரோட்டை இடைமறிக்கும் மாடுகளால் சைக்கிள், பைக்கில் செல்வோர் விபத்தில் சிக்குகின்றனர். இவற்றை அப்புறப்படுத்த புகார் தெரிவித்தும் நகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை. சில தினங்களுக்கு முன் கல்லறைமேட்டில் தனியார் பஸ்சில் சிக்கி மாடு விபத்துக்குள்ளானது. சுற்றுலா நகரில் முகச்சுளிப்பை ஏற்படுத்தும் இதுபோன்றவற்றை தவிர்க்க நகராட்சி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X